செம்பருத்தி பூ பரிகாரம்: நிதி நெருக்கடி தீர; மன நிம்மதி கிடைக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

By Asianet Tamil  |  First Published Jul 18, 2024, 12:51 PM IST

பச்சை நிற இலைகளுக்கு இடையே மலர்ந்து சிரிக்கும் சிவப்பு நிற பூக்களான செம்பருத்தி பூக்களை பார்க்கவே அழகாக இருக்கும். வீட்டு தோட்டத்தில் செம்பருத்தி பூக்களை வளர்ப்பது மகாலட்சுமியின் அம்சம் நிறைந்ததாக போற்றப்படுகிறது. நம்முடைய வீட்டின் தோட்டத்தில் செம்பருத்தி பூ செடியை எங்கு நட்டு வைத்து வளர்த்தால் என்ன பலன் என வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
 


எந்த திசையில் வளர்க்கலாம்:
சிவப்பு நிறமான செம்பருத்தி பூ மருத்துவ குணம் கொண்டது மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரப்படி செல்வ வளத்தை அதிகரிக்கக் கூடிய சக்தி கொண்டதாக இருக்கிறது சித்தர்கள் செம்பருத்தியை தங்கபஸ்பம் என்று அழைக்கிறார்கள். உங்களுடைய வீட்டின் மேற்கு அல்லது தெற்கு  திசைகளில் செம்பருத்தி பூ செடி வைப்பது மிகவும் நல்லது. செம்பருத்தி பூ செடி, சிவப்பு நிறம் கொண்ட, ஒற்றை செம்பருத்தி பூ செடியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

செம்பருத்தி பூ பரிகாரம்:
வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும். என்று நினைப்பவர்கள் செம்பருத்தி பூவை வைத்து பரிகாரம் செய்யலாம். தொழில் வியாபாரத்தில் நிறைய லாபமும் பணமும் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செம்பருத்தி பூவை வைத்து பரிகாரம் செய்யலாம்.

Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!

தடைகள் நீங்கும்:
செம்பருத்தி பூக்கள் நேர்மறை ஆற்றலின் அடையாளமாக கருதப்படுகின்றன. செம்பருத்தி பூ பரிகாரங்கள்  மூலம் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு பெருகும். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீச, செல்வம் குறையாமல் இருக்க, அனைத்திலும் வெற்றிகளை குவிக்க, நீங்கள் நிச்சயமாக செம்பருத்தி பூவின் உதவியுடன் சில பரிகாரங்களை செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி விடும், பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

ஒரு மண்டலம் பரிகாரம்:
உங்கள் வீட்டு தோட்டத்தில் பூத்த செம்பருத்தி பூவை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு வைத்து, உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட வேண்டுதலை வைத்துவிட்டு, அதன் பின்பு உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். 48 நாட்கள் என்பது ஒரு கணக்கிற்காக சொல்லப்படுவது தான். அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வரும் பட்சத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

Tap to resize

Latest Videos

லட்சுமி தேவி வீட்டில் தங்க வேண்டுமா..? அப்ப 'இந்த' வாஸ்து விதிகளை பாலோ பண்ணுங்க..

கடன் பிரச்சினை தீரும்:
கடனில் இருந்து விடுபட  மிக எளிமையான பரிகாரம் உள்ளது. வெள்ளிக்கிழமை நாளில், விநாயகப் பெருமானை வணங்கி 5 செம்பருத்தி  பூக்களை வைத்து பூஜை செய்த பிறகு, அந்த பூக்களை உங்கள் பெட்டகத்திலோ அல்லது பணம் வைக்கும் இடத்திலோ வைக்கவும். குறைந்தது 7 நாட்களுக்கு இதைச் செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகி வருமானம் அதிகரிக்கும். நீங்கள் கடனில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம்.

மகாலட்சுமியின் அருள் பார்வை:
வேலை, தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டுமானால் செம்பருத்திப் பூவினால் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் அன்னை லட்சுமியின் அருள்பார்வை உங்களுக்கு கிடைக்கும். உங்கள்  வாழ்க்கையில் முன்னேற்றம் தேடி வரும்.

நிதி நெருக்கடி நீங்கும்:
உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு செம்பருத்தி பூக்களை வைத்து மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களது வேண்டுதலை இறைவன் நிறைவேற்றுவார். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான வேண்டுதல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். எதையுமே நம்பிக்கையோடு செய்து பாருங்கள், இறைவன் நிச்சயம் வேண்டுதலை நிறைவேற்றுவார்.

click me!