நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் உறுதிப்படுத்த, சிறிய இடத்தில் கூட, வாஸ்து படி சரியான பூஜை அறையை அமைக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி ஒரு பூஜை அறையை கட்டுவது வீட்டிற்குள் செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் அமைதியை ஈர்க்கும் நேர்மறையை கொண்டு வருகிறது என்பது நம்பிக்கை.. வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு திசைக்கும் சில முக்கியத்துவம் உள்ளது. எனவே, பூஜை அறைக்கான வாஸ்து குறிப்புகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
உங்கள் பூஜை அறைக்கான வாஸ்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றும்போது உங்கள் வீடு கடவுளின் இருப்பிடமாக மாறும். தவறுகளைத் தவிர்த்து, வாஸ்து தோஷத்திலிருந்து விடுபட சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், பூஜை அறைக்கு நேர்மறை ஆற்றலை ஈர்க்கலாம். எனவே, நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் உறுதிப்படுத்த, சிறிய இடத்தில் கூட, வாஸ்து படி சரியான பூஜை அறையை அமைக்க வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பூஜை அறை வாஸ்து குறிப்புகள்
படிக்கட்டுக்கு அடியில் பூஜை அறை கட்டக்கூடாது
பூஜை அறை கழிப்பறை அல்லது குளியலறையிலிருந்து விலகி இருக்க வேண்டும்
மேற்குப் பார்த்த வீட்டில் பூஜை அறையை பிரதான வாசல் பூஜை அறைக்கு முன்னால் வைப்பதைத் தவிர்க்கவும்
மேற்கு நோக்கிய வீட்டில், பூஜை அறை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். இந்த இடம் உங்கள் வீட்டை செழிப்பாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவும்.
வடக்கு பார்த்த வீட்டில் பூஜை அறை
வடக்கு நோக்கிய வீட்டில் பூஜை அறை வைப்பதற்கு வடகிழக்கு திசையே சரியான திசையாகும். இது வாழ்க்கை அறை சுவர்களுக்கு அடுத்ததாக வடிவமைக்கப்பட்டு இணைக்கப்படலாம். வீட்டின் கிழக்கு மூலையில் வடக்கு பார்த்த அறை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். வரவேற்பறையின் ஒரு பக்கத்தில் பூஜை அறையையும் அமைக்கலாம்.
தெற்கு பார்த்த வீட்டில் பூஜை அறை
தெற்கு நோக்கிய வீட்டில் பூஜை அறை தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. இது மரணத்தின் கடவுளான எமதர்ம ராஜாவின் திசையாக கருதப்படுகிறது. இதனால் பணம் தொடர்பான சிக்கல், கணவன் மனைவி உறவில் சிக்கல் என பல பிரச்சனைகள் ஏற்படும். வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி பூஜை அறையின் திசையை பராமரிக்கவும். தெற்கு நோக்கிய வீடுகளுக்கு பூஜை அறையின் மேற்கூரையை முக்கோண வடிவில் அமைக்க வேண்டும்.
கிழக்கு பார்த்த வீட்டில் பூஜை அறை
கிழக்கு நோக்கிய வீட்டின் பூஜை அறை, பூஜை செய்யும் போது கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி இருக்க வேண்டும். வாஸ்து படி, உங்கள் வீட்டின் உள்ளே இருக்கும் பூஜை அறையின் திசை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்க வேண்டும். இது உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் செழிப்பையும் உறுதி செய்யும்.
பூஜை அறையில் சிலைகளை வைப்பதற்கு பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புகள்
விநாயகயருக்கும் சரஸ்வதி தேவிக்கும் நடுவில் லக்ஷ்மி தேவி இருக்க வேண்டும். விநாயகப் பெருமானை இடது பக்கம் வைக்க வேண்டும்
பூஜை அறை வாஸ்துவின்படி, வீட்டின் வடக்குப் பகுதியில் சிறிய அளவிலான சிவலிங்கத்தை வைக்க வேண்டும்.
பூஜையறையில் அனுமன் தெற்கு திசையை நோக்கி இருக்க வேண்டும்
துர்க்கை, குபேரர், விநாயகர் சிலைகளை வடக்குப் பக்கமாகவும் தெற்கு நோக்கியும் வைக்க வேண்டும்.
சிவன், பிரம்மா, விஷ்ணு, சூரியன் ஆகியோரை வீட்டின் கிழக்குப் பகுதியில் மேற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும்.
பூஜை அறை வாஸ்து: வாஸ்து படி பூஜை அறையில் வைக்க வேண்டியவை
பூஜை அறையில் போர், இறப்பு அல்லது எதிர்மறை படங்களை வைப்பதை தவிர்க்கவும்
பூஜை அறையில் இருந்து குப்பைத் தொட்டிகளை ஒதுக்கி வைக்கவும்
உங்கள் சிலைகளுக்கு முன்னால் தண்ணீர் நிரப்பப்பட்ட கிண்ணத்தை வைக்கவும்
புனித இடத்தில் தண்ணீர் நிரப்பப்பட்ட செப்பு பாத்திரங்களை வைக்கவும்
பூஜை அறையில் புதிய மலர்கள், தூபங்கள், விளக்குகள், வேதங்கள் மற்றும் பிற பூஜை பொருட்களை வைக்கவும்.
எனவே வீட்டில் இருக்கும் பல பிரச்சனைகளுக்கு தவறான திசையில் பூஜை அறை இருப்பதே காரணம். உங்கள் பூஜை அறையை அமைக்கும் முன்பு ஒரு வாஸ்து நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்..