வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்து இருப்பது மிக அவசியமானதாகும். இதற்கு வீட்டில் சில மாற்றங்களை செய்வதால் முன்னேற்றம், வளர்ச்சி, நிம்மதி ஆகியவற்றை பெற முடியும். வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வீடு என்பது வெளிப்புறம் சுத்தம், உள்ளே அமைதி இருந்தால் தான் வாழ்வும் இனிமை தான். ஆனால் சில சமயம், வீட்டில் ஏதாவது பிரச்சனைகள், குழப்பம், நிம்மதியின்மை, சண்டை சச்சரவுகள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும். இது போன்ற வீட்டில் நிம்மதியின்மை, பிரச்சனை இருந்து கொண்டே இருந்தால் சில குறிப்பிட்ட வாஸ்து முறைகளை பின்பற்றினால் வாழ்வில் பலவிதமான நன்மைகளை பெற முடியும். வாஸ்து, இது வெறும் கட்டிட திட்டமல்ல. நம் வீடு எப்படிச் சிந்திக்கிறது, எப்படி உணர்கிறது என்பதை மாற்றும் சக்தி. இப்போ நம்ம வீடு மகிழ்ச்சிக்கான மையமாக மாற 5 முக்கிய வாஸ்து மாற்றங்களைப் பாக்கலாம்.
மகிழ்ச்சியான வீட்டிற்கான வாஸ்து டிப்ஸ் :
1. நுழைவு வாசல் :
வீட்டு வாசல் கிழக்கு (East) அல்லது வடகிழக்கு (North-East) முகமாக இருக்க வேண்டும். இது நேர்மறை சக்தி (positive energy) உள்ளே freely ஓட உதவும். வாசலில் ஒரு தொட்டியில் துளசி, மண் விளக்கு அல்லது சின்ன கோலத்துடன் வரவேற்பு செய்வது நன்மை தரும். வாசலில் நிழலாக இரும்பு பொருட்கள், அடர்த்தியான நிறங்கள், குப்பைகள் இருக்கக்கூடாது.
2. ஹாலில் இருக்கை அமைப்பு :
வீட்டின் தெற்கு மேற்கு (South-West) பகுதியில் பெரியவர்களின் இருக்கை இருக்கட்டும். அது நம்பிக்கை, நிலைத்தன்மை தரும். சோபா, டிவி எல்லாம் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஜன்னல்களில் நன்றாக வெளிச்சம் வர வேண்டும். மழைநீரை அனுப்பாத கண்ணாடி பூட்டுகளை தவிர்க்கவும். மரத்தால் செய்யப்பட்ட மேஜை / சோபா அமைப்புகள் நிலைமையை நன்றாக்கும்.
மேலும் படிக்க: வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்ளும் 7 ராசிக்காரர்கள்
3. படுக்கை அறை அமைப்பு :
தம்பதிகள் படுக்கை அறை தெற்கு / தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டும். படுக்கையின் தலை தெற்கு, கால்கள் வடக்கு நோக்கி இருக்க வேண்டும். இது நிலையான அன்பு மற்றும் நெருக்கம் தரும். படுக்கை அறை சுவரின் வண்ணங்கள் மற்றும் படுக்கை விரிப்பின் நிறங்கள் கண்களை சோர்வடைய வைக்கும் டார்க் ரெட், கருப்பு கலர்கள் தவிர்த்து சாம்பல், மஞ்சள், தேன் நிறம் பயன்படுத்தலாம். மொபைல், லேப்டாப், அலுவலகக் கனக்ஷன் எல்லாம் படுக்கையறையில் தவிர்க்க வேண்டும்.
4. பூஜை அறை :
வீட்டு பூஜை அறை வடகிழக்கில் (North-East) இருக்க வேண்டும். சாமி படங்கள் மேற்கு அல்லது தெற்கு சுவரில், நீங்கள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர வேண்டும். ஒவ்வொரு காலை, மாலை நேரமும், தீபம், தூபம், வாசனைப்பூ, குடம் நீர் வைத்தால் மனம் பூரணமாகும். பூஜை அறையில் பழைய பூஜை பொருட்கள், பழைய பூக்கள் தேங்கி இருக்கக் கூடாது.
மேலும் படிக்க: vastu tips வீட்டில் மல்லிகை செடியை இந்த இடத்தில் வைத்து பாருங்க...அதிர்ஷ்டம் கொட்டும்
5. பராமரிப்பு :
வீடு முழுவதும் சுத்தம், ஒழுங்கு இருக்க வேண்டும். குறிப்பாக வடகிழக்கு மூலையில் இடம் நிரம்பாமல் இருக்கட்டும். மணமுள்ள தாவரங்கள், சின்ன மண்பாண்டங்கள், துளசி, money plant போன்றவை நல்ல சக்தியை ஏந்தும். இடங்கள் நிறைய இருக்கவேண்டும். பொருட்கள் அதிகம் சேர்ந்து இல்லாத வெற்று இடம் தான் நம்மை சந்தோஷமாக வைக்கிறது. பழைய சாமான்கள், கெட்டிப் பொருட்கள், உடைந்த பொருட்கள் இது மனதையும் உறவுகளையும் சோர்வடையச் செய்யும்.