
துலாம் ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு சுறுசுறுப்பான மற்றும் நன்மை பயக்கும் வாரமாக இருக்கும்., நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து இருந்த முக்கியமான காரியம் வெற்றிகரமாக முடிவடையும். உங்கள் பேச்சிலும் செயலிலும் தைரியம் வெளிப்படும். இதன் காரணமாக பல காரியங்களை சாதிப்பீர்கள். பயணங்கள் மூலம் புதிய வாய்ப்புகள் அல்லது லாபகரமான விஷயங்கள் நடக்கும். மனதில் மகிழ்ச்சியும், திருப்தியும் நிலைத்திருக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் இன்று சிறிய அக்கறை தேவைப்படலாம். குறிப்பாக உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சீரான உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது உங்களை மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். கண் சம்பந்தமான பிரச்சினைகள் வந்து நீங்க வாய்ப்பு உள்ளது. எனவே போதுமான அளவிற்கு தூங்க வேண்டியது அவசியம். இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
நிதி நிலைமை இந்த வாரம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத வகையில் பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் பற்றி ஆலோசிக்க இந்த வாரம் சாதகமாக இருக்கும். நிதானமாக முடிவுகளை எடுப்பது லாபம் தரும். கொடுத்த கடன்கள் மீண்டும் கைக்கு வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சில சுப செலவுகள் ஏற்படலாம்.
கல்வியில் மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான முன்னேற்றம் காணப்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்விப் பயிலும் மாணவர்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு சென்று படிக்க முயற்சிப்பவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றிகளைப் பெறுவார்கள். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு மனதிற்கு தெம்பு தரும்.
வேலையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் மேலதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் திறமையான செயல்பாடுகளுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்கான சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்களுடன் இணக்கமான சூழலை பராமரிப்பது அவசியம். தொழில் அல்லது வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட நினைப்பவர்கள் தீவிர கவனம் செலுத்தலாம். கூட்டாளிகளுடன் இணக்கமாக செயல்படுவது வெற்றியைத் தரும்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வதால் உறவுகள் பலப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடைபெறும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் ஆசி கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த மன வேறுபாடுகள் குறையும்.