சனி வக்ர நிவர்த்தி.. இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம்.. உங்க காட்டில் பணமழை தான்..

By Ramya s  |  First Published Sep 11, 2023, 8:10 AM IST

கடந்த ஜூன் 17-ம் தேதி கும்பராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்து வரும் நிலையில் நவம்பர் 4-ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார்.


9 கிரகங்களில் நீதிபதி என்று அழைக்கபப்டும் ஒரே கிரகம் சனி மட்டும் தான். ஒருவர் செய்யும் நற்செயல்களுக்கு ஏற்ப அவருக்கு நன்மையும், தீமையையும் சனி பகவான் வழங்குகிறார். எனவே ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சி தனது இயக்கத்தை மாற்றும் போது அது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் நற்பலன்களை பெற்றாலும், சிலருக்க்கு பிரச்சனைகள் ஏற்படலாம். 

அந்த வகையில் வரும் நவம்பர் மாதம் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். கடந்த ஜூன் 17-ம் தேதி கும்பராசியில் சனி வக்ர பெயர்ச்சி அடைந்து வரும் நிலையில் நவம்பர் 4-ம் தேதி வக்ர நிவர்த்தி அடைகிறார். எனவே சனியின் இந்த வக்ர நிவர்ட்த்ஹி சில ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டகரமானதாகவும், மங்களகரமானதாகவும் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்று விரிவாக பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

இந்த 6 ராசிக்கு வைரத்தால் ஆபத்து...உங்கள் ராசிக்கு வைரம் அதிர்ஷ்டமா அல்லது துரதிர்ஷ்டமா..!!

துலாம் :

சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்கள்கரமானதாக கருதப்படுகிறது. எனவே நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு உங்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் நிறைந்ததிருக்கும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். பண ஆதாயத்திற்கான பல வாய்ப்புகள் இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் சிறந்த வெற்றியை பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த சூழல் இருக்கும்.

கும்பம் :

சனியின் வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பான நற்பலன்களையே வழங்குவார். நவம்பர் 4-ம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடையும் போது கும்ப ராசிக்காரர்களின் பொன்னான நாட்கள் தொடரும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அதிர்ஷ்டமானதாக கருதப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சனி பகவானின் ஆசீர்வாதம் கிடைக்கும். உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெளிநாட்டில் இருந்தும் பணம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் பண ஆதாயம் உண்டாகும். இந்த காலக்கட்டத்தில் நிதி நிலை வலுவாகவும் சிறப்பாகவும் இருக்கும்.

click me!