ராகு-கேது பெயர்ச்சி சிலருக்கு சாதகமற்றதாக உள்ளது. எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது இரண்டு முக்கியமான கிரகங்கள் ஆகும். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த கிரகங்கள், ஒரு நபரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு கிரகங்களின் பெயர்ச்சிகள் ஏற்படும் போது அதன் பலன்கள் எப்படி இருக்குமோ என்று பலரும் பயப்படுவார்கள். அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான ராகு-கேது பெயர்ச்சி அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30, 2023 மதியம் 2:13 மணிக்கு ராகு, மேஷ ராயில் இருந்து மீன ராசிக்கு மாறுகிறார்.
அதே போல் அன்றைய தினம் மதியம் 2:13 மணிக்கு கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு பிற்போக்கு இயக்கத்தில் மாறுகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால், இயற்கையாகவே, ஒவ்வொரு ராசிக்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள் இருக்கும். இருப்பினும், ராகு-கேது பெயர்ச்சி சிலருக்கு சாதகமற்றதாக உள்ளது. எனவே எந்தெந்த ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ராகு-கேது பெயர்ச்சி 2023 : எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்
சிம்மம் : ராகுகேது பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த காலக்கட்டத்தில் கடன் பிரச்சனை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் சில மனக்குழுப்பங்கள் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கூடுதல் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.
மிதுனம் : மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்ப உறவில் சிக்கல் ஏற்படலாம். வீட்டில் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில் முயற்சிகள் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு லாபகரமாக இருக்காது, மேலும் வாழ்க்கையில் எதிர்பாராத ஏற்றத் தாழ்வுகள் ஏற்படலாம். உங்களைப் பற்றிய உங்கள் புத்திசாலித்தனத்தை வைத்து, சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள்.
கன்னி : இந்த காலகட்டத்தில், உங்கள் வாழ்க்கையின் பல அம்சங்களில் நீங்கள் சிரமங்களை சந்திக்க நேரிடும். நீங்கள் சொந்த தொழில் செய்தாலும் அல்லது வேலை செய்தாலும், பல சிக்கல்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் உங்கள் நெருங்கிய உறவுகள் விரிசல் அடையும் வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த விஷயங்களைக் கையாளும் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருப்பது நல்லது.
கும்பம் : ராகுகேது பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படலாம். வெளியே செல்லும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. கணவன் மனைவி இடையே சிக்கல்கள் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பணம் தொடர்பான விஷங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் மனைவியை ராணி போல் நடத்துவார்களாம்..
மீனம் : இந்த காலகட்டத்தில் நிதி கவலைகள், உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் அனைத்தும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வியாபாரம் செய்பவர்கள் சிரமங்களைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் நஷ்டம் மற்றும் பணியிடத்தில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, நீங்கள் கடன் வாங்கியிருந்தால், இந்த காலக்கட்டம் ம் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்.