Radha Ashtami 2023 : ராதாஷ்டமி எப்போது? வரலாறு, முக்கியத்துவம் என்ன? எப்படி விரதம் இருக்க வேண்டும்?

By Ramya s  |  First Published Sep 21, 2023, 3:32 PM IST

கிருஷ்ணர் மீதான ராதையின் பக்தி தெய்வீக அன்பின் மிக உயர்ந்த வடிவமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த ராதாஷ்டமி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.


ராதாஷ்டமி அல்லது ராதா ஜெயந்தி என்பது கிருஷ்ணரின் தெய்வீக மனைவியாகவும் கருதப்படும் ராதையின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஒரு இந்து பண்டிகையாகும். கிருஷ்ணர் மீதான தனது நிபந்தனையற்ற அன்பு மற்றும் பக்திக்கு உதாரணமாக ராதை திகழ்கிறார். கிருஷ்ணர் மீதான ராதையின் பக்தி தெய்வீக அன்பின் மிக உயர்ந்த வடிவமாகக் கருதப்படுகிறது. எனவே இந்த ராதாஷ்டமி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ராதாஷ்டமி தேதி மற்றும் நேரம்:

Tap to resize

Latest Videos

அஷ்டமி திதி ஆரம்பம்- செப்டம்பர் 22, 2023- பிற்பகல் 1.35
அஷ்டமி திதி முடிகிறது- செப்டம்பர் 23, 2023- மதியம் 12.17

ராதா ஜெயந்தி அன்று காலையில் எழுந்து புனித நீராடுவதன் மூலம் பக்தர்கள் தங்கள் நாளை தொடங்குகிறார்கள். பின்னர், ராதை தேவியின் சிலை பஞ்சாமிர்தத்தால் (பால், சர்க்கரை, தேன், தயிர் மற்றும் நெய் ஆகியவற்றின் கலவை) வீடுகளிலும் கோயில்களிலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. ராதா சிலைக்கு புதிய உடை மற்றும் நகைகள் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். மந்திரங்கள் ஓதப்பட்டு, பூஜை செய்யப்பட்டு பூக்களும் பழங்களும் ராதாவுக்கு சமர்பிக்கப்படுகின்றன. இறுதியில், பிரசாதம் வழங்கப்படுகிறது.

சக்தி வாய்ந்த வாராஹி தேவி அம்மனை "இப்படி" வழிபடுங்க...வீட்டில் ராஜ யோக பலன்கள் குடியேறும்..!!

இந்த நாள் ராதாவின் பிறப்பு மற்றும் கிருஷ்ணர் மீதான அவரது தெய்வீக அன்பைக் கொண்டாடுகிறது. ராதா இந்து மதத்தில் அன்பின் உருவகமாக குறிப்பிடப்படுகிறார். எனவே ராதாஷ்டமியன்று பெண்கள் விரதம் இருந்து ராதாவை வேண்டிக்கொள்கின்றனர். மேலும், அவர்கள் ராதா மற்றும் கிருஷ்ணரின் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள், பக்தி பாடல்களைப் பாடுகிறார்கள்.

இந்த நாளில், பூசாரிகள் மற்றும் பக்தர்கள் ராதா மற்றும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மத நூல்களைப் படிக்கிறார்கள், மேலும் சில பகுதிகளில், ராதை மற்றும் கிருஷ்ணருக்கு இடையிலான விளையாட்டுத்தனமான தொடர்புகளைக் குறிக்கும் ஊஞ்சல்கள் அலங்கரிக்கப்பட்டு அமைக்கப்பட்டன. ராதாஷ்டமி அன்று ராதா மற்றும் கிருஷ்ணரை வழிபட்டால் திருமண வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை. எனவே அன்றைய தினம் திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ராதை மற்றும் கிருஷ்ணரை மனமுருக வேண்டிக்கொள்கின்றனர்.

ராதாஷ்டமி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?

ராதாஷ்டமி மதியம் பன்னிரண்டு மணி வரை விரதம் இருந்து பின்னர், தெய்வத்திற்கு பிரசாதம் வழங்குவதன் மூலம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள் ராதா மற்றும் கிருஷ்ணரின் மகிமைகளைப் பாடி கொண்டாடுகின்றனர். மேலும் உத்தரபிரதேசத்தின் பர்சானாவில் பெரும் கொண்டாட்டங்களில் பங்கேற்க கோயில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர்..

click me!