Personality by birth: குருவாரத்தில் பிறந்தவர்கள் குணமானவர்களாம்; வியாழக்கிழமை பிறந்த நீங்க இப்படிப்பட்டவர்களா?

Published : Jul 11, 2024, 10:34 AM ISTUpdated : Jul 11, 2024, 12:17 PM IST
Personality by birth: குருவாரத்தில் பிறந்தவர்கள் குணமானவர்களாம்; வியாழக்கிழமை பிறந்த நீங்க இப்படிப்பட்டவர்களா?

சுருக்கம்

வியாழக்கிழமை பிறந்தவர்கள் எப்படிபட்டவர்கள் என்று பார்க்கலாம். மனிதர்கள் பல குணநலன்களை கொண்டிருப்பார்கள். ஒருவர் பிறந்த நாள், தேதியை வைத்து அவர்களின் கேரக்டர் எப்படி இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.   

வியாழக்கிழமை பிறந்தவர்கள் அமைதியானவர்கள். குருவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் நீதி நேர்மை என்று பேசுவதோடு தைரியசாலிகளாகவும் இருப்பார்களாம். 3ஆம் எண்ணில் பிறந்தவர்களும் குரு பகவான் குணத்தோடு இருப்பார்களாம்.

செல்வம் செல்வாக்கு:
குருவின் ஆதிக்கமான வியாழக்கிழமையிலோ, 3ஆம் எண்ணிலோ பிறந்தவர்கள் பெரும்பாலும் அதிக பணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள். சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. வாழ்க்கையில் பணத்தை பல வழிகளில் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். வருமானம் பல வழிகளில் வருவதால் பொதுக் காரியங்களுக்கும், ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்காகவும் செலவு செய்வார்கள்.

பண்பும் பாசமும்:
வியாழனன்று பிறந்தவர்கள் முன்கோபம் உடையவர்களாக இருப்பதால் வார்த்தைகள் கடுமையாக இருக்கும். பின்னர், கோபம் தணிந்து அனைவரிடமும் மனம் திறந்து பேசுவதால், இவர்களிடம் ரகசியங்கள் தங்காது. மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பண்பினால் பல துன்பங்களை அடைவது இவருக்கு வழக்கம். பிறருடைய செயல்கள் பற்றிய மாற்று கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.

தீராத வினை தீர செல்வம் பெருக; எந்த ராசிக்காரர்கள் எந்த கோவிலை வணங்க வேண்டும் தெரியுமா?

நீதி நேர்மை:
இவர்கள் குரு ஆதிக்கம் உள்ளவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளும் கொண்டு, பேச்சிலும் எழுத்திலும் ஆற்றல் மிக்கவர்கள். குருவின் மனநிலையோடு தங்களுக்குத் தெரிந்த வித்தைகளை முழு மனதுடன் பிறருக்கு கற்று கொடுப்பவர்கள். சுயநலம் பார்க்காமல் பிறருக்கு உதவி செய்யக் கூடிய குணத்துடன், உண்மை, நீதி, நியாயம் ஆகியவற்றை வாழ்வில் கடைப்பிடிப்பார்கள்.

3ஆம் எண்ணில் பிறந்தவர்கள்:
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்திற்குட்பட்டவர்கள் என்பதால் நல்லொழுக்கமும், உயர்ந்த பண்புகளையும் பெற்றிருப்பார்கள். நல்ல பேச்சாற்றல், எழுத்தாற்றல் யாவும் அமைந்திருக்கும். தாம் கற்றதை பிறருக்கும் கற்றுக் கொடுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். நல்லவர்களிடத்தில் சுமூகமாக பழகும் குணமும், அத்துமீறி நடப்பவர்களை கண்டிக்கத்தக்க தைரியமும் உடையவர்கள். தன்னைச் சார்ந்தவர்களாக இருந்தால் தவறுகளை மன்னிக்கும் சுபாவம் இருக்கும்.

அதிகாலையில் வரும் கனவு பழிக்குமா..? ஜோதிடம் சொல்வது என்ன..?

ஜோதிட தொழில்:
இவர்களுக்கு ஏற்ற தொழில் என பார்க்கும்போது பல பேருக்கு கல்வி சொல்லித் தரக்கூடிய ஆசிரியர் பணி, தலைமை ஆசிரியர் பொறுப்பு யாவும் அமையும். நீதிபதிகள், வக்கீல்கள் முதலான சட்டத் தொடர்புடைய தொழில்களும் முன்னேற்றம் கொடுக்கும். நல்ல வியாபாரிகளாகவும், கோயிலில் பணிபுரிபவர்களாகவும் இருப்பார்கள். 3ம் எண் குருவின் ஆதிக்கத்திலிருப்பதால் ஜோதிடக் கலையிலும் ஆர்வம் இருக்கும்.

சுறுசுறுப்பானவர்கள்:
எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதை செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். மிகவும் சுறுசுறுப்பும், எதையும் எளிதில் கிரகிக்கக்கூடிய தன்மையும் இவர்களுக்கு உண்டு.  குடும்ப வாழ்வில் எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சுலபமாக சமாளித்து விடுவார்கள். காதல் விவாகாரங்களில் ஈடுபட்டாலும் ஒரு சிலருக்கு மட்டுமே காதல் திருமணம் கைகூடும். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:
வியாழக்கிழமையன்று பிறந்தவர்கள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு மஞ்சள் நிற ஆடை அணிந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் மேலும் நன்மைகள் நடைபெறும்.  வியாழக்கிழமை பூச நட்சத்திரம் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை செய்வது பல நன்மைகளை தரும்.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mesham to Meenam Dec 10 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Thulam Rasi Palan Dec 10: துலாம் ராசி நேயர்களே, இன்று நடக்கும் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.!