October 2025 Numerology : நீங்க பிறந்த தேதி இதுவா? அக்டோபர் மாதம் உங்களுக்கு பணத்தை அள்ளித் தரும்!

Published : Sep 30, 2025, 09:00 PM IST
October 2025 numerology

சுருக்கம்

எண் கணிதத்தின் படி, அக்டோபர் மாதத்தில் பிறந்தவருக்கு அது எப்படிப்பட்ட மாதமாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளையாகும். ஜோதிடத்தைப் போலவே எண் கணிதமும் ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை, எதிர்காலம், குணாதிசயங்கள், பலம் பலவீனம் போன்ற பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். அந்த வகையில் எண் கணிதத்தின்படி, நீங்கள் அக்டோபர் மாதத்தில் பிறந்த நபராக இருந்தால் இந்த 2025 அக்டோபர்மாதம் உங்களுக்கு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எண் 1 :

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 1, 10, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1 ஆகும். இந்த எண் உள்ளவர்கள் அக்டோபர் மாதத்தில் நல்ல தொழில் முன்னேற்றத்தை காண்பார்கள். காதல் வாழ்க்கையில் கலவையான பலன்கள் இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல உறவை பேணுவார்கள் புதிய வருமான ஆதாரங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடக்கும்.

எண் 2 :

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2 ஆகும். இந்த எண் கொண்டவர்கள் அக்டோபர் மாதத்தில் தொழில் விரிவாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை காண்பார்கள். ஆனாலும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆகவே செலவை கட்டுப்படுத்துங்கள். வருமானம் நன்றாக இருக்கும். வேலையில் பணி சுமை காரணமாக மன அழுத்தத்தை சந்திப்பீர்கள். முதலில் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அது எதிர்கால நன்மைகளை தரும். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். உடல்நல பிரச்சனைகள் ஏற்படாது.

எண் 3 :

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3 ஆகும். இந்த என்னை உடையவர்கள் அக்டோபர் மாதத்தில் நிதி விஷயத்தில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் சண்டைகள் வர வாய்ப்புள்ளது. ஆகவே அதை அதை அமைதியாக கையாளுங்கள். வேலையில் மிகவும் சிறப்பாக பணியாற்றுவீர்கள். அதனால் மரியாதை மற்றும் நற்பெயர் அதிகரிக்கும். இந்த அக்டோபர் மாதத்தில் உங்களுக்கு புதிய நண்பர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளன.

எண் 4 :

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 4, 13, 22 மற்றும் 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் கவன குறைவாக இருப்பதே தவிர்க்க வேண்டும். மேலும் கணவர்கள் மனைவியுடனான உறவு மோசமடையும். கடின உழைப்பின் பலனை காண்பீர்கள். இந்த மாதத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். உங்களது நிதிநிலை இம்மாதம் நன்றாக இருக்கும்.

எண் 5 :

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். இருப்பினும் வணிகத்தில் சில சிரமங்களை சந்திப்பீர்கள். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும் உடல் நலத் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

எண் 6 : 

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6, 15 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6 ஆகும். அக்டோபர் மாதத்தில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எல்லா இடங்களிலும் சாதகமான பலன்களை காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் திருமணம் நடக்கலாம். ஆனால் நிதி விஷயங்களில் ரொம்பவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதுபோல ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

எண் 7

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 7, 16 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7 ஆகும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அக்டோபர் மாதத்தில் நிதி சிக்கலை சந்திப்பார்கள். ஆகவே உங்களது செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இந்த மாதம் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது வேலையில் ரொம்பவே பிஸியாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளன. வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

எண் 8

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8 ஆகும். அக்டோபர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் மேலதிகாரிகளின் இதயங்களை வெல்வார்கள். ஆரோக்கியத்தில் பலவீனமாக இருப்பீர்கள். பயணத்திற்கு இந்த மாதம் நல்லது.

எண் 9

எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 9, 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9 ஆகும். அக்டோபர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவை பெறுவார்கள். வேலையில் இருப்பவர்கள் இந்த மாதம் நன்றாக உணர்வார்கள். தொழிலதிபர்கள் முன்பை விட சிறந்த சூழலை காண்பார்கள். உங்களது நிதி நிலைமையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். இந்த மாதம் உங்களுக்கு உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் வரும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!