
சூரியன்: சூரிய பகவான் மீன ராசியின் எட்டாம் வீட்டை பாதிப்பதால் எதிர்பாராத செலவுகள், கூட்டாண்மை தொடர்பான நிதி பிரச்சனைகள் ஏற்படலாம்
சனி: இந்த மாதம் முழுவதும் மீன ராசியில் வக்ர நிலையில் சஞ்சரிக்கிறார். இதனால் நீங்கள் அவசரம் காட்டாமல், பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்பட வேண்டியது அவசியம்.
குரு: குரு பகவானின் நிலையானது மாதத்தின் பிற்பகுதியில் சாதகமாக மாறுவதால், சில எதிர்பாராத நன்மைகளும், நீங்கள் ஆசைப்பட்டு இழந்த விஷயங்கள் மீண்டும் வந்து சேரக்கூடிய சூழலும் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
மீன ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் கலவையான பலன்களை அளிக்கும் மாதமாக உள்ளது. முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ஓரளவு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
பணியிடத்தில் நீங்கள் அனைவருடைய விருப்பத்தையும் நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். இதன் காரணமாக வேலைப்பளு அதிகரிக்கலாம். எனவே உங்களால் இயன்ற அளவு வேலையை செய்ய ஒப்புக் கொள்வது நல்லது. உங்கள் திறமையும் உழைப்பையும் நிரூபிக்க அவசர வேலைகளை செய்ய வேண்டியதில்லை. வேலையின் தரம் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தொழில் ரீதியாக பின்னடைவுகள் இருக்காது. தற்போது நிலையை தக்க வைத்துக் கொள்ள முடியும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
நிதி ரீதியாக இந்த மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கலாம். வருமானம் திருப்திகரமாக இருந்தாலும், செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். தேவையில்லாத பொருட்களை வாங்குவதை தவிர்க்கவும். கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை தவிர்க்கலாம். சிறிய சேமிப்பு இலக்குகளை நிர்ணயித்து வாராந்திரமாக அதை பின்பற்றுவது நல்லது. உங்கள் குடும்பத்தினர் மூலமாக சில நிதி செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குடும்ப வாழ்க்கையில் இந்த மாதம் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். உடன் பிறந்தவர்களுடன் உறவு இனிமையாக மாறும். மாதத்தின் முதல் பகுதி சற்று பதற்றம் நிறைந்ததாகவும், சலசலப்புகள் கூடியதாகவும் இருக்கலாம். எனவே பேச்சில் நிதானம் தேவை. மாமியார் வழி உறவுகள் மூலமாக சண்டைகள் ஏற்படலாம். எனவே கவனத்துடன் செயல்பட வேண்டும். காதலை வெளிப்படுத்த திட்டமிட்டு இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி சாதகமாக இருக்கும்.
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரத்தை கடைபிடிக்காமல் இருப்பதும், அதிகமான அழுத்தமும் உடல் நலத்தை பாதிக்கும். சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். தலைவலி, வயிற்று வலிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஆழமான தூக்கத்திற்கும், எளிய உடற்பயிற்சிகளுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)