October Rasi Palangal: மகர ராசி நேயர்களே.! உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கும்.! கரன்சி நோட்டுகள் கட்டு கட்டாக கைக்கு வரும்.!

Published : Sep 30, 2025, 05:19 PM IST
magara rasi october rasi palangal

சுருக்கம்

Magara Rasi October Month Rasi Palangal: அக்டோபர் மாதம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம். 

அக்டோபர் மாதம் மகர ராசியில் கிரகங்களின் நிலை:

சூரியன்: அக்டோபர் 17 ஆம் தேதி வரை சூரியன் உங்களின் 9 ஆம் வீட்டில் (அதிர்ஷ்ட ஸ்தானத்தில்) இருப்பதால் கலவையான முடிவுகளே கிடைக்கும். அக்டோபர் 17 க்குப் பிறகு சூரியன் 10 ஆம் வீடான தொழில் ஸ்தானத்தில் இருந்தாலும், பலவீனமாக இருப்பதால் அதுவும் சராசரியான பலன்களையேத் தரும்.

செவ்வாய்: செவ்வாய் பெயர்ச்சி காரணமாக அக்டோபர் 27 வரை சராசரி மற்றும் நல்ல பலன்களைத் தரும்.

ராகு கேது: ராகு கேதுவின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தராது. எனவே தேவையற்ற விஷயங்களில் அவரசப்படுவதையும், சவால்களை ஏற்றுக் கொள்வதையும் தவிர்க்கவும்.

குரு: குரு பகவான் மாதத்தின் முதல் பாதியில் மிதமான பலன்களையும், இரண்டாம் பாதியில் சிறப்பான பலன்களையும் தரக்கூடும். அக்டோபர் 18 ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் தன்னம்பிக்கை மற்றும் மன அமைதி மேம்படும்.

சனி: சனி பகவானின் நிலையானது வழக்கத்தை போல ஓரளவு பலன்களை மட்டுமே தரும்.

பொதுவான பலன்கள்:

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்களுக்கு சராசரியை விட கூடுதல் பலன்களைத் தரக்கூடியதாக அமையும். இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் பொறுப்புகள் சோதிக்கப்படலாம். எனவே பொறுமை மற்றும் நிதானத்துடன் செயல்படுவது அவசியம்.

வேலை மற்றும் தொழில்:

தொழில் ரீதியாக இந்த மாதம் சாதகமான வாய்ப்புகளை அளிக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் உருவாகலாம். பணியிடத்தில் உங்களுக்கு சில சவால்கள் ஏற்படலாம். ஆனால் புத்திசாலித்தனமான முடிவுகளால் இவற்றை சமாளித்து இலக்குகளை அடைவீர்கள். உங்கள் பதவிக்குரிய மரியாதையும் கிடைக்கும். வேலையில் சிறிய பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் வேலையை மாற்ற முயற்சிப்பது நல்லதல்ல. ஏனெனில் இது ஆபத்தான முடிவுகளாக இருக்கலாம். எனவே எத்த மாற்றங்களையும் தவிர்ப்பது நல்லது.

நிதி நிலைமை:

வணிகத்தில் புதன் பகவானின் ஆதரவு இருப்பதால், நல்ல லாபம் கிடைக்கும். மாதத்தின் இரண்டாம் பாதி தொழில் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் சிறந்ததாக இருக்கும். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ராகுவின் சஞ்சாரத்தில் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டுமே செலவு செய்தால் பணப்பிரச்சனையை ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம். அக்டோபர் 17 ஆம் தேதிக்குள் அரசு வேலைகள் அல்லது கடந்த கால சேமிப்புகள் மூலமாகவோ நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

குடும்ப உறவுகள்:

திருமணமானவர்களுக்கு இந்த மாதம் சிறப்பான மாதமாக இருக்கும். நீங்கள் விரும்பும் நபர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவீர்கள். பழைய பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம். கடந்த கால வேறுபாடுகளை மீண்டும் நினைவுபடுத்தும் எதையும் பேசுவதை தவிர்க்கவும். உறவில் மூன்றாம் நபர் குறுக்கீட்டை தவிர்க்கவும். மூன்றாம் நபரின் தலையீடு குடும்பத்தில் மன அமைதியை கெடுக்கும்.

கல்வி மற்றும் ஆரோக்கியம்:

இந்த மாதம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைப்பளு அதிகரிப்பதால் உடல் சோர்வு ஏற்படலாம். மூட்டுகளில் இறுக்கம், தசை சோர்வு, கண்கள் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சீரான உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை பின்பற்றுவது அவசியம். சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள். உணர்வுகளை அடக்கி வைக்காமல் நம்பகவமானவர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிப்பது தேர்வில் கூடுதல் மதிப்பெண்களை பெற உதவும்.

பரிகாரம்:

  • வெள்ளிக்கிழமை தோறும் கனகதாரா ஸ்தோதிரத்தை பாராயணம் செய்யுங்கள்
  • மகாலெட்சுமி தாயாரை தாமரைப் மலர்கள் சமர்பித்து வழிபடுங்கள்
  • விஷ்ணு பகவான் வழிபாடு தீமைகளை நீங்க உதவும்.
  • ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம், பொருள் தானம் செய்யுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Weekly Rasi Palan: மீன ராசி நேயர்களே, குரு பகவான் ஆசியால் இந்த வாரம் சொத்துக்களை வாங்கப்போறீங்க.!
Weekly Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் சிக்கல்கள் எல்லாம் தீரும்.! ஆனாலும் இந்த விஷயங்களில் கவனம்.!