October Rasi Palangal: கும்ப ராசி நேயர்களே.! இந்த மாதம் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி தான்.! கவனமா இருங்க.!

Published : Sep 30, 2025, 05:36 PM IST
kumba rasi october rasi palangal

சுருக்கம்

Kumba Rasi October Month Rasi Palangal: அக்டோபர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து பொதுவான பலன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் கும்ப ராசியில் கிரகங்களின் நிலை:

சூரியன்: அக்டோபர் மாதத்தின் முதல் பாதியில் சூரியன் எட்டாம் வீட்டிலும், இரண்டாவது பாதியில் பாக்கிய ஸ்தானத்தில் தாழ்ந்த நிலையில் சஞ்சரிப்பதால் சாதகமற்ற பலன்கள் கிடைக்கக்கூடும்.

செவ்வாய்: அக்டோபர் 27 வரை செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் சில சமயங்களில் அனுகூலமற்ற பலன்கள் கிடைக்கலாம். 27ஆம் தேதிக்குப் பிறகு சில நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

புதன்: அக்டோபர் 3 ஆம் தேதி வரை புதன் 8 ஆம் வீட்டில் இருப்பது சாதகமாக கருதப்படுகிறது. அக்டோபர் 3 முதல் 24 வரை ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் சாதகமற்ற பலன்கள் கிடைக்கும். அக்டோபர் 24 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். எனவே புதனால் கலவையான பலன்கள் கிடைக்கும்.

சனி ராகு கேது: இந்த மாதம் பெரிய அளவிலான பலன்களை தரக்கூடிய இடத்தில் இந்த மூன்று கிரகங்களும் இல்லை.

குரு: மாதத்தின் முதல் பகுதியில் சாதகமாகவும், அதன் பின்னர் சராசரியான பலன்களையும் குரு பகவான் தர இருக்கிறார். குருவால் சராசரியான அல்லது சற்றே சிறந்த முடிவுகளையே தர முடியும்.

சுக்கிரன்: அக்டோபர் 9 ஆம் தேதி வரை ஏழாம் வீட்டில் இருக்கும் சுக்கிரன், அதன் பிறகு 8 வது வீட்டில் பலவீனமான நிலையில் காணப்படுகிறார். எனவே சுக்கிர பகவானால் பலவீனமான பலன்களையே எதிர்பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களுக்கு அக்டோபர் மாதம் சாதகமாக அமையவில்லை. கிரகங்களின் நிலை மற்றும் பிற காரணங்களால் கும்ப ராசிக்காரர்கள் கலவையான பலன்களையே எதிர்பார்க்க முடியும். இந்த மாதம் சராசரியை விட சற்று குறைவான முடிவுகளையே எதிர்பார்க்கலாம். இருப்பினும் உங்கள் முயற்சி மற்றும் விவேகமான செயல்பாடுகள் காரணமாக நீங்கள் குறைந்தபட்ச பலன்களையாவது பெற முடியும்.

வேலை மற்றும் தொழில்:

தொழில் காரகர் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் வேலை தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வேலை மாறுதல்களை தவிர்க்க வேண்டும். வேலையில் திருப்தியற்ற சூழல் இருந்தால் அவசரமாக வேலையை விட்டு வெளியேறக்கூடாது. வணிகத்தின் காரராக விளங்கும் கிரகமும் முழு ஆதரவை தர வாய்ப்பு இல்லை. எனவே வணிக ரீதியான நஷ்டங்கள் ஏற்படலாம். அபாயகரமான முதலீடுகளை செய்ய வேண்டாம்.

நிதி நிலைமை:

இந்த மாதம் பணம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். நிதி சார்ந்த விஷயங்களில் அதிக ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து, பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டும். நீண்ட கால கடன்கள், சட்டரீதியான சிக்கல்கள், குருவின் அருளால் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் செலவுகளிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

குடும்ப உறவுகள்:

கணவன் மனைவிக்குள் நெருக்கம் மற்றும் சுதந்திரம் இரண்டுக்கும் இடையே சமநிலையை பேண வேண்டிய சூழல் வரும். பெரிய வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பது உறவுகளை பேண உதவும். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அவர்கள் உங்களுக்கு முழு ஆதரவை வழங்க வாய்ப்பு உள்ளது. தந்தையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

கல்வி மற்றும் ஆரோக்கியம்:

உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேண வேண்டியது அவசியம். போதுமான ஓய்வெடுங்கள். மனதளவில் சோர்வாக இருந்தால் அந்த வேலையை தவிர்த்து விட்டு மன நிம்மதிக்கான பணிகளில் ஈடுபடுங்கள். தோள்பட்டை, கீழ் முதுகு பகுதியில் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் தூங்குவதற்கும், உடலுக்கு நீர்ச்சத்து கொடுப்பதற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

பரிகாரம்:

  • அக்டோபர் மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் நான்கு காய்ந்த தேங்காய் ஓடுகளை நீரில் மிதக்க விடுங்கள்.
  • சக்கரத்தாழ்வார் சன்னதிக்க சென்று வழிபடுவது தொல்லைகளில் இருந்து விடுதலை தரும்.
  • நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.
  • விஷ்ணு பகவானுக்கு துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.
  • இயலாதவர்களுக்கு உதவுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Birth Date: இந்த 3 தேதில பிறந்தவங்களுக்கு '30' வயசுக்கு மேல பணக்காரராகும் யோகம் இருக்கு
Weekly Rasi Palan: மீன ராசி நேயர்களே, குரு பகவான் ஆசியால் இந்த வாரம் சொத்துக்களை வாங்கப்போறீங்க.!