This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் மாற்றம், ஒழுக்கம் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும்.
உங்கள் உள் உணர்வு வலுவாக இருக்கும். எனவே மனம் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது.
அமைதியாகவும் அதே சமயம் உறுதியுடன் இருப்பது வெற்றியைத் தேடித்தரும்.
கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, புதிய இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்வீர்கள்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தை பொறுத்தவரை இந்த வாரம் சீரான பழக்க வழக்கங்கள், ஓய்வு, மன சமநிலை ஆகியவை தேவை.
வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் அல்லது அதிக சோர்வு ஏற்படலாம். எனவே போதுமான ஓய்வு எடுங்கள்.
வார இறுதியில் தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் நிறைந்திருக்கும்.
சரியான நேரத்தில் உணவு உண்பது, போதிய தூக்கம், நடைப்பயிற்சி, சுய பராமரிப்பு முறைகள் ஆகியவை ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையில் வளர்ச்சியும், புதிய வாய்ப்புகளும் ஏற்படலாம்.
முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
திடீர் பணம் வரவு இருந்தாலும், குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கலாம். எனவே பணத்தை புத்திசாலித்தனமாக செலவிடுவது அவசியம்.
குழந்தைகள் அல்லது பொழுதுபோக்கிற்காக செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடலில் கவனம் செலுத்துவதன் மூலம் நிலையான நிதி நிலைமையை ஏற்படுத்த முடியும்.
அவசரமான நிதி முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
கல்வி:
மாணவர்கள் இந்த வாரம் பொறுமையுடன் இருக்க வேண்டும்.
விடாமுயற்சி செய்ய வேண்டும். அதிக ஒழுக்கத்துடன் படிப்பது அவசியம்.
கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
குழுவாக படிப்பது, கூட்டு முயற்சிகள் பயனுள்ளதாக இருக்கும்.
வார இறுதியில் தகவல் தொடர்பு திறன்கள் மேம்படும்.
கடின உழைப்பிற்கு ஏற்ற மதிப்பெண்கள் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
பணியிடத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
உங்கள் எதிரிகள் உங்களை கவிழ்க்க தருணம் பார்த்து கொண்டிருக்கின்றனர். எனவே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
உங்களின் தெளிவான திட்டமிடல் மற்றும் கடின உழைப்பு மூலம் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இதன் காரணமாக பணியிடத்தில் உங்கள் மரியாதை அதிகரிக்கும்.
தொழில் செய்து வருபவர்கள் இந்த வாரம் நல்ல லாபத்தை காண்பீர்கள்.
தொழிலை விரிவு படுத்துவதற்கான உங்கள் திட்டங்களை மனதிற்குள்ளே வைத்து அமைதியாக செயல்படுத்துங்கள். வெளியில் கசிய விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் அதிக அக்கறை மற்றும் பொறுமை அவசியம்.
அவசரப்பட்டு எந்த வார்த்தையும் விட வேண்டாம். வெளிப்படையாக பேசுவதன் மூலம் சில மனக்கசப்புகளை நீக்கலாம்.
உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு வர வாய்ப்பு உள்ளது.
வார இறுதியில் உங்கள் பேச்சால் வீட்டின் சூழல் இனிமையாக மாறும்.
துணையின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.
துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிட்டும்.
பரிகாரம்:
“ஓம் பௌமே நமஹ:” என்கிற மந்திரத்தை 27 முறை உச்சரிக்கவும்.
உங்கள் ராசியின் அதிபதியான செவ்வாய் பகவானின் பலத்தை அதிகரிக்க சிவப்பு பவளம் அணியலாம்.
திங்கள் கிழமைகளில் சிவபெருமான் ஆலயங்களுக்குச் சென்று வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யலாம்.
“ஓம் நமச்சிவாய” மந்திரத்தை ஜெபிப்பது மனவலிமை மற்றும் அமைதியைப் பெற உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)