This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே இந்த வாரம் உங்களின் வளர்ச்சி, தெளிவு மற்றும் வலுவான தொடர்புகளுக்கு சாதகமான வாரமாக இருக்கும்.
புதிய யோசனைகள், கற்பனைத் திறன், ஆற்றல், உத்வேகம் அதிகரிக்கும்.
உங்களின் தனிப்பட்ட வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் ஆழமான சிந்தனைகளுக்கு உகந்த வாரமாகும்.
வாரத்தின் நடுப்பகுதியில் கலை மற்றும் படைப்பாற்றலில் ஆர்வம் அதிகரிக்கும்.
எண்ணங்களில் ஒருவித அலைச்சல் மற்றும் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நிதானம் தேவை.
சமநிலையை கடைபிடிப்பது நன்மைகளை தரும்.
ஆரோக்கியம்:
பொதுவாக ஆரோக்கியம் நிலையாக இருக்கும். இருப்பினும் மன அழுத்தம் காரணமாக சோர்வு ஏற்படலாம்.
போதுமான ஓய்வு எடுப்பது மனதை அமைதிப்படுத்தும்.
மனதை அமைதியடையச் செய்யும் செயல்களை மேற்கொள்ளுங்கள்.
தியானம் அல்லது யோகா போன்ற பயிற்சிகள் நன்மை பயக்கும்.
நடைப்பயிற்சி அல்லது லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது புத்துணர்ச்சி அளிக்கும்.
தாமதமாக சாப்பிடுவதை தவிருங்கள். இதன் காரணமாக செரிமானப் பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தொழில் செய்வர்கள் கூட்டாளிகளுடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது வணிகத்தில் லாபத்தை அதிகரிக்க உதவும்.
திடீர் பணவரவு அல்லது லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பண விஷயங்களில் கவனக் குறைவாக இருப்பதை தவிர்க்கவும்.
முதலீடு செய்வதற்கு முன்னர் நிதானத்துடன் முடிவு எடுக்கவும்.
குடும்பம் அல்லது வீட்டிற்கான செலவுகள் இந்த வாரம் அதிகமாக இருக்கலாம்.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் வளர்ச்சி மிகுந்த வாரமாக இருக்கும்.
படிப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும், கவனத்தை மேம்படுத்துவதற்கும் இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சிறப்பானதாக இருக்கும்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
ஆசிரியர்கள் அல்லது வழிகாட்டிகள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
ப்ராஜெக்ட் போன்ற விஷயங்களில் கூட்டு முயற்சி மூலம் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள்
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழில் வளர்ச்சிக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்கும்.
வீட்டு வாழ்க்கைக்கும் பணிச் சூழலுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவீர்கள்.
உங்கள் கடின உழைப்பும், யோசனைகளும் உயர் அதிகாரிகளின் கவனத்தைப் பெறும்.
எனவே உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அல்லது பொறுப்புகள் வழங்கப்படலாம்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இது உங்கள் எதிர்காலத்திற்கான பலன்களை அளிக்கும்.
உடன் பணிபுரிவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மைகளைத் தரும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் இன்று அன்பும், ஆதரவும் நிறைந்திருக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடனான பிணைப்பு வலுப்படும்.
குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிப்பீர்கள். இது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் சார்ந்த பேச்சுகள் வெற்றியில் முடியும்.
குழந்தைகளின் முன்னேற்றம் அல்லது குடும்ப செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
சொத்து சார்ந்த பிரச்சனைகள் தீர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம்:
நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு லட்சுமி நாராயணரை வழிபடுவது நல்லது.
விஷ்ணு பகவான் ஆலயங்களுக்கு சென்று துளசிமாலை சாற்றி, வழிபடுங்கள்.
கற்கண்டை நைவேத்யமாக படைத்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குங்கள்.
நோய்களில் இருந்து விடுபட உங்களின் இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)