This Week Rasi Palan: அக்டோபர் 06 முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
இந்த வாரம் நிதி, உறவுகள், தனிப்பட்ட வளர்ச்சி என அனைத்திலும் முன்னேற்றத்தை காணும் வாரமாக அமையும்.
புத்திசாலித்தனமான திட்டமிடல் மற்றும் அமைதியான அணுகுமுறை மூலம் வெற்றியை காண்பீர்கள்.
மனதில் புதிய தெளிவு மற்றும் புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும்.
புதிய விஷயங்களை கற்க ஆர்வம் காட்டுவீர்கள்.
சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் காணப்படும்.
தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவடையும்.
சவாலான பணிகளையும் தைரியமாக செய்து சாதித்து காட்டுவீர்கள்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
அதிகப்படியான வேலைப்பளுவை தவிர்க்க வேண்டும்.
உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்த யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வது அல்லது உடற்பயிற்சிகளை தீவிரப்படுத்துவது நல்லது.
வாரத்தின் தொடக்கத்தில் சிறு மன அழுத்தங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அதிகமாக சிந்திப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் போதுமான ஓய்வு உங்கள் ஆற்றலை மேம்படுத்தும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் நிதி நிலைமை மிகவும் வலுவாக இருக்கும்.
எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் வர வாய்ப்பு உள்ளது.
தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் பணத்தை சேமிக்க முடியும்.
வாரத்தின் தொடக்கத்தில் புத்திசாலித்தனமான முடிவுகள் மூலம் பணத்தை சேமிப்பீர்கள்.
அதிகப்படியான ஆபத்து உள்ள முதலீடுகளில் முதலீடு செய்வதையும் தவிர்க்கவும்.
நிதி சார்ந்த விஷயங்களில் குடும்ப உறுப்பினர்கள் நண்பர்களின் ஆலோசனையைப் பெறுவது பயனுள்ளதாக இருக்கும்.
கல்வி:
இந்த வாரம் மாணவர்கள் அதிக கவனம் மற்றும் உழைப்புடன் படித்து சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.
மாணவர்கள் கடின உழைப்பால் பெறும் வெற்றியால், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
பெற்றோர்களிடம் இருந்து ஆச்சரிய பரிசுகளை பெறவும் வாய்ப்பு உள்ளது.
குழுவாக படிப்பது அல்லது சக மாணவருடன் இணைந்து செயல்படுவது கூடுதல் நன்மைகளைத் தரும்.
எழுத்து, பேச்சு, செயல் திறன் ஆகியவை இந்த வாரம் கணிசமாக அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
புதிய வேலை தேடுபவர்களுக்கு வெற்றிகரமான வேலை கிடைக்கும்.
கூட்டாண்மை அல்லது கூட்டு முயற்சிகள் மூலம் தொழிலில் நல்ல லாபத்தை காண்பீர்கள்.
வாரத்தின் இரண்டாம் பகுதியில் பல நன்மைகள் கிடைக்கலாம்.
வேலையில் உங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள், சதி திட்டம் தீட்டுபவர்கள் தோற்கடிக்கப்படுபவர்கள்.
முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நம்பகமானவர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.
புதிய தொழில் முயற்சிகளை உடனடியாக தொடங்க வேண்டாம். திட்டமிடுதலில் கூடுதல் கவனம் செலுத்தி பொறுமையாக தொடங்கலாம்.
குடும்ப உறவுகள்:
உறவுகளில் நெருக்கம், அன்னோன்யம் மற்றும் பிணைப்பு அதிகரிக்கும்.
பழைய கருத்து வேறுபாடுகளை தீர்த்து சமரசம் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.
குடும்ப உறுப்பினர்களுடன் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் சாமர்த்தியமாக கையாள வேண்டியது அவசியம்.
உங்கள் துணையிடமிருந்து முழுமையான ஆதரவு கிடைக்கும்.
அன்பான உரையாடல்கள் உறவுகளை பலப்படுத்த உதவும்.
குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்
பரிகாரம்:
“ஓம் வாயுபுத்ராயை நமஹ:” என்கிற மந்திரத்தை தினமும் 19 முறை உச்சரிப்பது நன்மை தரும்.
ஐயப்பனை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.
கோவில்களில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது பலன்களை அதிகரிக்கும்.
மன அமைதிக்கு நடைப்பயிற்சி, தியானம் அல்லது பிரார்த்தனைகளில் ஈடுபடலாம்.
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது நற்பலன்களை கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)