Oct 14 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று டாப் கியரில் போவீங்க.! பொன், பொருள், புகழ் கிடைக்கும்.!

Published : Oct 13, 2025, 04:39 PM IST
magara rasi

சுருக்கம்

Today Rasi Palan : அக்டோபர் 14, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

  • மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் நீங்கள் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. 
  • வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். 
  • வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். 
  • திட்டமிட்டபடி காரியங்களை நிறைவேற்றுவீர்கள். 
  • மனதில் சிறு சஞ்சலங்கள் தோன்றலாம். எனவே எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது

நிதி நிலைமை:

  • இன்று பணவரவு சீராக இருக்கும். 
  • பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நிதி நெருக்கடிகள் குறையும். 
  • நிலையான வருமானம் இருக்கலாம். இருப்பினும் செலவுகளை திட்டமிட்டு செய்வது நன்மை தரும். 
  • நீண்ட காலம் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. 
  • தங்கம், வெள்ளி, நிலம் போன்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து பின்னர் செய்வது நன்மைகளை தரும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். 
  • கணவன் மனைவி மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மைகளைத் தரும். 
  • நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவுவார்கள். 
  • குடும்ப விஷயங்களில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 
  • பிறரின் குடும்ப விஷயத்திலும் நீங்கள் தடையில்லாமல் இருப்பது அவசியம்.

பரிகாரங்கள்:

  • இன்று உங்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க குலதெய்வத்தை பிரார்த்தனை செய்யுங்கள். 
  • எந்த விஷயத்தை தொடங்குவதற்கு முன்னரும் குலதெய்வத்தை ஒருமுறை மனத்தில் நினைத்து செய்வது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும். 
  • திருச்செந்தூர் முருகனை மனதார நினைத்து வழிபடுவது தடைகள் நீங்கி வெற்றி பெற உதவும். 
  • ஏழை, எளியவர்கள், இயலாதவர்களுக்கு உதவுவது நன்மைகளை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பஞ்சக்கிரஹி யோகத்தால் தனுசுக்கு அடித்தது ஜாக்பாட்! பிப்ரவரி மாதம் முழுக்க கொண்டாட்டம் தான்!
பஞ்ச மகா புருஷ யோகங்களில் ஒன்று ருச்சிக ராஜயோகம்: யாருக்கு அமையும்? என்னென்ன நற்பலன்கள் கிடைக்கும்?