Sept 23 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே.. இன்னைக்கு சோதனை மேல் சோதனை தான்.! நிதானமா இருங்க.! பொறுமை அவசியம்.!

Published : Sep 22, 2025, 09:10 PM IST
kumba rasi today rasi palan

சுருக்கம்

Today Rasi Palan : செப்டம்பர் 23, 2325 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே இன்று நீங்கள் சில சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆனால் உங்களுடைய பொறுமையும், புத்திசாலித்தனமும் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நிதானமாக சிந்தித்து எடுக்க வேண்டும். உடல்நலத்தில் சற்று பின்னடைவு ஏற்படலாம். எனவே உடல்நலம் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நிதி நிலைமை:

உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் கிடைக்கும். திடீர் லாபத்திற்கான வாய்ப்புகளும் உள்ளன. அதே நேரத்தில் செலவுகளும் அதிகரிக்கும் என்பதால் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற பொருட்கள் மற்றும் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வாகனப் பழுது போன்ற வீண் செலவுகள் அதிகரிக்கலாம். முதலீடுகள் குறித்து நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் முதலீடு செய்வது நன்மை தரும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் இன்று மகிழ்ச்சியான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவது, உறவுகளை வலுப்படுத்தும். காதல் வாழ்க்கையில் இருப்பவர்கள் உங்கள் துணையுடன் சில இனிமையான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பிரிந்து சென்ற உறவுகள் மீண்டும் புதிதாக ஒன்றிணையலாம்.

பரிகாரங்கள்:

நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி பெறவும், காரியத் தடைகள் நீங்கவும் இன்று விநாயகர் பெருமானை வழிபடுவது மிகவும் நன்மை தரும். மன அமைதிக்காக நரசிம்மரை வழிபடலாம். நரசிம்மருக்கு துளசி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏழை, எளியவர்கள், வாயில்லா ஜீவன்களுக்கு உணவளியுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Astrology: வாழ்க்கையில் திடீர் திருப்பம் வேண்டுமா? கிரகங்களை சாந்தப்படுத்தும் ஆன்மிக ரகசியங்கள் இதோ!
Astrology: புத்தாண்டில் பொங்கு சனியால் அடிக்க போகுது அதிர்ஷ்டம் .! 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.!