Sept 23 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே இன்னைக்கு வீண் அலைச்சல், தெண்ட செலவு, பழி எல்லாம் வரும்! கவனமா இருங்க.!

Published : Sep 22, 2025, 09:00 PM IST
meena rasi today rasi palan

சுருக்கம்

Today Rasi Palan: செப்டம்பர் 23, 2325 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

மீன ராசி நேயர்களே இன்று உங்கள் மனதில் ஒருவித குழப்பமும், அமைதியின்மையும் ஏற்படலாம். எனவே எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் அவசரப்படாமல் நன்கு யோசித்து செயல்பட வேண்டியது அவசியம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஆதரவு உங்களுக்கு பலமாக இருக்கும். அவர்களின் ஆலோசனையைக் கேட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

நிதி நிலைமை:

நிதி சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு இன்று உகந்த நாள் அல்ல. எனவே முதலீடுகளை ஒத்தி வைப்பது புத்திசாலித்தனம். வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் இன்று உருவாகலாம். ஆனால் அதை முழுமையாக பயன்படுத்துவதற்கு கூடுதல் முயற்சி எடுக்க வேண்டி இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். காதல் வாழ்க்கையில் சிறிது மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஒருவருக்கொருவர் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் துணையுடன் அதிக நேரம் செலவிடுவது உங்கள் உறவில் உள்ள பிணைப்புகளை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.

பரிகாரங்கள்:

இன்று அனுமன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடலாம். இது மனக் குழப்பங்களை தவிர்த்து, தெளிவான முடிவுகளை எடுக்க உதவும். “ஓம் நமோ நாராயணாய” மந்திரத்தை உச்சரிப்பது மன அமைதியைத் தரும். ராமர் வழிபாடு செய்வது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் அல்லது உணவு வழங்குவது நன்மைகளை அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rahu Peyarchi: 2026-ல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ராகு பகவான்.! கடும் இழப்புகளை சந்திக்கப்போகும் 6 ராசிகள்.!
Astrology: புத்தாண்டில் கை கோர்க்கும் சுப கிரகங்கள்.! தை மாதம் முதல் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.!