Kumba Rasi Palan Dec 27: கும்ப ராசி நேயர்களே, இன்று இந்த 3 விஷயங்களை மட்டும் செய்யக்கூடாது.!

Published : Dec 26, 2025, 04:51 PM IST
Kumba Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 27 Kumba Rasi Palan: டிசம்பர் 27, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

டிசம்பர் 27, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் எந்த காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டிய நாளாகும். சுப காரியங்களில் இருந்த தடைகள் இன்று விலகும். நண்பர்கள் மற்றும் பிற சூழ்நிலைகளால் சில அலைச்சல்கள் ஏற்படலாம். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.

நிதி நிலைமை:

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். கையில் காசு தங்காதவாறு தேவையற்ற செலவுகளும் ஏற்படலாம், எனவே பண விஷயங்களில் நிதானமாக இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். முதலீடுகளில் இன்று கவனமாக இருக்க வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது அமைதி தரும். கண் அல்லது பாதங்களில் சிறு உபாதைகள் ஏற்படலாம். எனவே முறையான ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வருகையால் மன அழுத்தம் குறையும்.

பரிகாரங்கள்:

இன்று கால பைரவரை வணங்குவது தடைகளைப் போக்கி துணிவைத் தரும். அனுமன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட தடைகள் விலகும். தூய்மைப. பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைக்கவும். ்

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Meena Rasi Palan Dec 27: மீன ராசி நேயர்களே, ஜென்ம சனியின் ஆதிக்கம் இருப்பதால் இந்த ஒரு விஷயத்தில் கவனமா இருங்க.!
ஜனவரியில் இரண்டு முறை உருவாகும் யுதி திருஷ்டி யோகம்.! 2026 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.!