Meena Rasi Palan Dec 27: மீன ராசி நேயர்களே, ஜென்ம சனியின் ஆதிக்கம் இருப்பதால் இந்த ஒரு விஷயத்தில் கவனமா இருங்க.!

Published : Dec 26, 2025, 04:48 PM IST
Meena Rasi Today Rasi Palan

சுருக்கம்

Dec 27 Meena Rasi Palan: டிசம்பர் 27, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

டிசம்பர் 27, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். ஜென்ம சனியின் ஆதிக்கம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் நிலானத்துடன் செயல்படவும். முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்படலாம். இருந்தாலும் இறுதியில் வெற்றி உங்கள் வசமாகும். அதிகப்படியான வேலைப்பளுவால் சோர்வு ஏற்படலாம். எனவே திட்டமிட்டு செயல்படுவது நல்லது

நிதி நிலைமை:

நிதி நிலைமையைப் பொறுத்தவரை இன்றைய தினம் வரவும், செலவும் சமமாக இருக்கும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படக்கூடும் என்பதால் சிக்கனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். பெரிய அளவிலான முதலீடுகளை இன்று தவிர்ப்பது நல்லது. கடனாக கொடுத்த பணம் திரும்பி கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். எனவே பொறுமை காக்க வேண்டியது அவசியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்பொழுது கனிவாக பேச வேண்டியது அவசியம். கணவன் மனைவிக்கு இடையே சிறு கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உள்ளதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. கால் மற்றும் மூட்டு தொடர்பான சில உபாதைகள் ஏற்படக்கூடும். எனவே முறையான ஓய்வு அவசியம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். உங்கள் வேலைகளில் நீங்களே கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமை என்பதால் சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபடலாம். இது மன வலிமையை தரும். அருகில் உள்ள சனீஸ்வர ஆலயங்களில் எள் தீபம் ஏற்றி வழிபடலாம். இயலாதவர்கள் அல்லது முதியவர்களுக்கு தயிர்சாதம் வழங்குவது கிரக தோஷங்களின் வீரியத்தைக் குறைக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனவரியில் இரண்டு முறை உருவாகும் யுதி திருஷ்டி யோகம்.! 2026 முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.!
Maha Sanyog 2026: 2026-ல் குரு மற்றும் சனி பகவானின் அரிய இணைவு.! இந்த ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!