வரலட்சுமி விரதத்தின் போது பெண்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா?

Published : Aug 25, 2023, 09:55 AM ISTUpdated : Aug 25, 2023, 10:02 AM IST
வரலட்சுமி விரதத்தின் போது பெண்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் தெரியுமா?

சுருக்கம்

இன்று வரலட்சுமி விரதம். இந்நாளில் விரதம் இருக்கும் பெண்கள் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

வரலட்சுமி பூஜை தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமாகக் கொண்டாட்டப்படுகிறது. இந்த நாள் லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

குடும்பத்தின் அமைதி நிலவவும், குடும்பத்தின் நலன் மற்றும் மகிழ்ச்சிக்காகவும், கணவனின் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்காகவும் இந்த பூஜை பெண்களால் செய்யப்படுகிறது. வரலட்சுமி பூஜை நாளில் திருமணமான பெண்கள் பூஜை முடியும் வரை விரதம் இருப்பார்கள். இது ஆவணி மாதத்தின் முழு நிலவுக்கு முன் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வரலட்சுமி விரதம் 2023: பூஜை செய்ய உகந்த நேரம் எது? லட்சுமி தேவியை எப்படி வழிபட வேண்டும்?

திருமணமான பெண்கள் அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தம் நேரத்தில் பூஜைகான வேலையை செய்வர். அதற்கு முன்பாக அவர்கள் குளித்து இருக்க வேண்டும். அவர்கள் விரதம் இருக்கும் போது, அரை நாளுக்கு மேல் நீடிக்கும். இந்த இடைப்பட்ட நேரங்களில் அவர்கள் பூஜை அறை, முழு வீட்டை சுத்தம் செய்தல், கோலமிடுதல் மற்றும் பூஜைக்கு பல்வேறு வகையான இனிப்புகள் தயாரிப்பது போன்ற பல வேலைகளையும் செய்ய வேண்டும். இதற்கு நிறைய சகிப்புத்தன்மையும் ஆற்றலும் தேவை. அந்தவகையில், இவர்கள் இந்நேரத்தில் என்னென்ன சாப்பிட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

வாழைப்பழம்:
வாழைப்பழம் சகிப்புத்தன்மையை வளர்ப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழத்தில் இயற்கையான குளுக்கோஸ் உள்ளது. இது ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதை பழங்கள் அல்லது சாறு வடிவில் எடுத்துக் கொள்ளலாம். ஒரு வாழைப்பழம் உண்பது வேலைச் சுமையைத் தாங்கும் ஆற்றலை உருவாக்க உதவுவது மட்டுமல்லாமல், முழுமையின் உணர்வையும் உங்களுக்கு வழங்கும்.

பால்:
நீங்கள் விரதம் இருக்கும் போது வைட்டமின்கள், கால்சியம், மெக்னீசியம், ஆகியவை நிறைந்தது பால். இதனை நீங்கள் இந்நாளில் சாப்பிடலாம். பால் சிறந்த ஊட்டச்சத்து மூலமாகும். இது தூய்மையானதாகக் கருதப்படுகிறது மற்றும் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யவும் இதனை பயன்படுத்துகின்றனர். ஒரு கப் பால் அருந்துவது, விரதத்தைத் தொடரவும், பூஜை நாளில் ஒருவர் செய்ய வேண்டிய வேலைகளைக்கு தேவையான ஆற்றலை இது வழங்குகிறது.

பழச்சாறுகள்:
பழச்சாறுகள், நீங்கள் விரதத்தை கடைபிடிக்கும்போது உங்களுக்கு ஆற்றலை வழங்கும். இது ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். நீங்கள் பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு, மாதுளை போன்ற பல பழங்களில் நீங்கள் பழச்சாறுகளை தயார் செய்யலாம். இது ஆற்றல் தருவது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.

இதையும் படிங்க: Varalakshmi Pooja 2023 : மாங்கல்ய வரம், மாங்கல்ய பலம் தருவாள் தேவி..!!

நட்ஸ்கள்:
நட்ஸ்களில், குறிப்பாக பாதாம் மற்றும் திராட்சை நீங்கள் வேகமாக ஆற்றலை வழங்க உதவுகிறது. வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் நிறைந்த சிறந்த நட்ஸ்களில் பாதாம் ஒன்றாகும். இது   ஆற்றலை வழங்க உதவுகிறது. சுமார் 3-4 பாதாம் மற்றும் 4-5 திராட்சையை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் இதை சாப்பிடுங்கள். நீங்கள் விரதம் இருக்கும் நாளில் பூஜையின் போது வேலையைத் தொடர இது நிறைய ஆற்றலை வழங்க உதவுகிறது.

PREV
click me!

Recommended Stories

Birth Date : ஆண்களே! இந்த 3 தேதில பிறந்தவரா நீங்க? புகழும், வெற்றியும் தேடி வரும் யோகம்
Thulam Rasi Palan Dec 06: துலாம் ராசி நேயர்களே, இன்று இதை மட்டும் பண்ணிடீங்க வெற்றி உங்களுக்குத்தான்.!