பணப் பிரச்சனைகள் தீர.. செல்வம் பெருக, எந்த ருத்ராட்சம் அணிய வேண்டும்? எப்படி அணிய வேண்டும்?

By Ramya s  |  First Published Aug 24, 2023, 2:36 PM IST

நிதி சிக்கல்களை போக்கி செல்வ செழிப்பை அதிகரிக்க எந்த வகை ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்று பார்க்கலாம்.


இந்து மதத்தில் ருத்ராட்சம் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் கண்ணீரில் இருந்து ருத்ராட்சம் உருவானது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நபர் ருத்ராட்சம் அணியும் எதிர்மறை ஆற்றல் அவரை விட்டு விலகி, ன் நேர்மறை ஆற்றல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதால் பல பிரச்சனைகள் தீரும் என்று கூறப்படுகிறது. எனவே ருத்ராட்சம் இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

அந்த வகையில் உங்கள் வாழ்க்கையில் பணப் பற்றாக்குறை இருந்தால், அதற்கு ருத்ராட்சம் அணியலாம். ஆனால் இதற்கு எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் தெரியுமா? 1 முக ருத்ராட்சம் தொடங்கி 21 முக ருத்ராட்சம் வரை பல வகைகள் உள்ளன. எனவே நிதி சிக்கல்களை போக்கி செல்வ செழிப்பை அதிகரிக்க எந்த வகை ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்று பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

5 முக ருத்ராட்சம்

உங்கள் வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சம் வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், இதற்காக நீங்கள் 5 முக ருத்ராட்சத்தை அணிய வேண்டும். இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. 5 முக ருத்ராட்சம் செல்வத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது.

கணவன்- மனைவி இடையே சண்டை வராமல் இருக்க, இந்த வாஸ்து குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க

13 முக ருத்ராட்சம்

13 முக ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கத் தொடங்குவீர்கள். 13 முக ருத்ராட்சம் பண ஆதாயத்தை ஈர்க்க உதவுகிறது. இந்த ருத்ராட்சம் உங்களுக்கு செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் நபர்களை உங்கள் வாழ்க்கையில் ஈர்க்கும்.

21 முக ருத்ராட்சம்

21 முக ருத்ராட்சம் அணிவதால் பணத் தட்டுப்பாடு குறையத் தொடங்கு என்று கூறப்படுகிறது. ஏனெனில் இது செல்வத்தின் கடவுள் என்று அழைக்கப்படும் குபேரனுடன் நேரடியாக தொடர்புடையது. குபேரரே 21 முக ருத்ராட்சத்தை அணிந்தவருடன் வாழ்கிறார். எனவே, 21 முக ருத்ராட்சத்தை அணிவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.

7 முக ருத்ராட்சம்

7 முக ருத்ராட்சத்தில் லட்சுமி தேவி வசிப்பதாக நம்பப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பண ஆதாயத்திற்காக இந்த ருத்ராட்சத்தை அணியலாம். ஆனால் நீங்கள் பயனுள்ள முடிவுகளைப் பெற விரும்பினால், சூரிய உதயத்திற்கு முன் திங்கள்கிழமை காலை அணியுங்கள், அது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். ஏழு முக ருத்ராட்சம் சுக்கிரன் கிரகம். இந்த ருத்ராட்சத்தை அணிபவர் மீது லக்ஷ்மி தேவி அருள் பொழிகிறார். அதை அணிவதன் மூலம் சிறந்த கலைஞராக முடியும் என்பது ஐதீகம். மேலும் அவர் அழகு, மகிழ்ச்சி மற்றும் புகழ் பெறுகிறார். ருத்ராட்சத்தை எப்போதும் ஜோதிடத்தின் படியே அணிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போதுதான் அதன் முழு பலன் கிடைக்கும்.

ருத்ராட்சத்தை அணியும் முறை

திங்கட்கிழமையில் ருத்ராட்சம் அணிவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ருத்ராட்சத்தை செப்புப் பாத்திரத்தில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து அதை அகற்றிவிட்டு கோயிலுக்குச் சென்று சிவபெருமானுக்கு வில்வ இலைகளை வைத்து உங்கள் வேண்டுதலை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் அணிய போகும் ருத்ராட்சத்தை சிவலிங்கத்திற்கு அருகில் வத்து அபிஷேகம் செய்யவும், அதன் பிறகு சிவபெருமானின் மந்திரங்களை பாராயணம் செய்துவிட்டு, ருத்ராட்சத்தை அணியலாம்.

ருத்ராட்சம் அணிவதால் சிவபெருமானின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் வெற்றி உண்டு. ருத்ராட்சத்தில் பல வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு ருத்ராட்சத்திற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. பணம் கிடைக்க ருத்ராட்சம் அணிய வேண்டுமானால் ஜோதிடரிம் பேசிவிட்டு அணியலாம்.

click me!