ஆடி கடைசி வெள்ளி: வீட்டில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

By Kalai Selvi  |  First Published Aug 10, 2023, 10:47 AM IST

ஆடி கடைசி வெள்ளியில் செய்ய வேண்டிய வழிபாடு முறைகள் மற்றும் அது எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் இங்கு பார்க்கலாம்.


ஆடி மாதம் இந்த வருடத்தில் நமக்கு 4 வெள்ளிக்கிழமை கொண்டதாக அமைந்திருக்கிறது. அதன்படி கடைசி வெள்ளி நாளை (ஆகஸ்ட், 11) வருகிறது. கடைசி வெள்ளி கடை வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.  பொதுவாக இந்த கடைசி வெள்ளி வழிபாடு என்பது, மற்ற வெள்ளிக்கிழமைகளில் செய்ய முடியாத வழிபாடுகளை இந்த கடைசி வெள்ளிக்கிழமைகளில் நாம் செய்து கொள்ளலாம். ஏனெனில் ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒருவேளை நீங்கள் ஆடி வெள்ளி அன்று வழிபாடுகள் செய்ய முடியவில்லை அல்லது அதை தவறிவிட்டோம் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் இந்த கடைசி வெள்ளியில் நிறைவாக நாம் தலியலிட்டு இந்த வழிப்பாட்டுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நிறைய பேருடைய குடும்பங்களில் நடு வீடு கும்பிடுவது என்ற ஒரு வழக்கம் உண்டு. அது என்னவென்றால், இதுவும் படையல் (தளியல்) போன்றது ஆகும். பாவாடை காரி, பூவாடை காரி என்று சொல்லி வழிபடக்கூடிய வழிபாட்டு முறையும் இதே அடிப்படையாக வைத்ததுதான். அதுபோல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அம்பாள் உண்டு. அது பெண் தெய்வமாக தான் இருக்கும். அவை குலதெய்வமாக, காவல் தெய்வமாக, இஷ்ட தெய்வமாக இருக்கும்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க:  Aadi Velli Pooja: ஒவ்வொரு ஆடி வெள்ளிக்கிழமைகளில் இப்படி  பூஜை செய்யுங்கள்..தேவியின் அருள் கிடைக்கும்..!!

ஒருவேளை உங்களுக்கு குலதெய்வம் இல்லை என்றாலும், நீங்கள் குலதெய்வத்தை இதுவரை வழிபட்டதில்லை என்றும் நீங்கள் நினைத்தால் இந்த வெள்ளிக்கிழமையில் குலதெய்வத்திற்கு தழியலிட்டு வழிபாடு செய்தால் , அந்த வழிபாடு செய்யவில்லை என்ற குறையில் இருந்து உங்களுக்கு நிவர்த்திக் கிடைக்கும். இதுதான் இந்த வெள்ளிக்கிழமையில் தலையில் போடுவதற்கான முக்கிய காரணமாகும். இது மிகவும் எளிமையாக செய்யக்கூடிய பூஜையாகும். பொதுவாக தளியலை மதிய வேலைகள் தான் செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் அலுவலகத்திற்கு அல்லது உங்கள் வேலைகளுக்கு செல்ல வேண்டும் என்று இருந்தால் நீங்கள் இந்த வழிபாட்டை காலையிலே செய்து முடிக்க வேண்டும். 

வழிபாடு எப்படி செய்வது?

வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு முன்னதாக நாம் வியாழன் அன்று வீட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மா இலை தோரணை வெள்ளிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும், குறிப்பாக ஆடி மாதத்தில் இதனுடன் இரண்டு பக்கமும் வேப்பிலையும் சேர்த்து கட்ட வேண்டும்.  பின் நிலை வாசலில் சந்தனம், குங்குமம் இட்ட வேண்டும். மேலும் வீட்டின் பூஜை அறையில் இருக்கும் அம்பாளுடைய படத்தை நன்கு அலங்காரம் பண்ண வேண்டும். இந்த வெள்ளிக்கிழமையில் பூஜையறையில் எல்லா விதமான மலர்களும் இருக்க 
வேண்டும். 

கலசம்:
படையலுக்கு முதலில் கலசம் தயார் பண்ண வேண்டும். இதில் நம்முடைய குலதெய்வம், காவல் தெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் சரி அதை அந்த கலசத்தில் எழுந்தருள செய்ய வேண்டும். கலசத்தில் விபூதி, சந்தனமிட்டு இருக்க வேண்டும். அதில் சுத்தமான தண்ணீர் நிரம்பி இருக்க வேண்டும். மேலும் அவற்றில் ஒரு துளி மஞ்சளும் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக ஒரு கொத்து வேப்பிலையை அதில் வைக்க வேண்டும். ஏனெனில் இந்த வேப்பிலையில் வாசம் செய்யக்கூடியவள் அம்பிகை. அதனால் வேப்பிலையை கலசத்தில் கண்டிப்பாக வைக்க வேண்டும். பின் ஒரு முழம் பூவும் வைத்து வழிபட வேண்டும். குறிப்பாக கலசம் ஒரு இலை அல்லது தாம்பாளம் மீது தான் இருக்க வேண்டும். பூஜை அறையில் தான் இவற்றை நாம் செய்ய வேண்டும். 

படையல்:
அதுபோல் வழிபாடு அன்று 3 அல்லது 5 வகையான சாதங்கள் செய்ய வேண்டும். உதாரணமாக, சக்கரை பொங்கல், புளி சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புதினா சாதம், நெல்லிக்காய் சாதம் ஆகும். அம்பிகைக்கு மிகவும் விசேஷமானது துள்ளு மாவு என்பதால் இவற்றையும், இவற்றுடன் ஒரு இளநீர் மற்றும் கூழ் ஆகியவை வாழ இலையில் படையலாக வைக்க வேண்டும். இவற்றுடன் கலசத்தையும் வைத்து அம்பாளை கலசத்திற்குள் வரவழைக்க அவளை முழு மனதுடன் வழிபட வேண்டும். குறிப்பாக உங்களுக்கு விருப்பமான தெய்வத்தின் பெயரை சொல்லி வழிபட வேண்டும். அம்பாள் நாம் வைத்த படையலை ஏற்றுகொள்ள வேண்டும் என்று சொல்லியும் வழிபட வேண்டும்.

இதையும் படிங்க:  Aadi Velli 2023: ஆடி வெள்ளி முக்கியத்துவம் என்ன?இந்நாளில் சக்தி தேவியை வழிபட்டால் இவ்வளவு நன்மைகளா? 

மேலும் 'அபிராமி அந்தாதி' மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும். அம்பிகையின் அருளை பெற்று தரக்கூடிய மந்திரம் இதுவாகும். எனவே அபிராமி அந்தாதி மந்திரத்தை சொல்லிக்கொண்டே வழிபட வேண்டும். மேலும் பூஜை அறையில் அம்பாளை இருக்கும் படியாக நல்ல வாசனை தரும் சாம்பிராணியை வைக்க வேண்டும். ஏனென்றால் அம்பாள் 'சாம்பிராணி வாசகி' என்றும் அழைக்கப்படுகிறார். சாம்பிராணியில் வாசம் செய்யக்கூடியவள் அம்பிகை ஆவாள். எனவே வாசனையான சாம்பிராணி அல்லது மலர்களை வைத்து அம்பாளை பிரார்த்தனை பண்ணி, இந்த படையலை அம்பாளுக்கு நெய் வைத்தியம் செய்து உங்கள் வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

வழிபாடு முடிந்த பின் செய்ய வேண்டியவை:
வழிபாடு முடிந்த பின் படையலில் வைத்த உணவுகளை நீங்களே சாப்பிடலாம். இளநீர் அம்பாளுக்கு வைத்தது என்பதால் அவற்றை நீங்கள் சாப்பிடக்கூடாது. அது போல் கலசத்தில் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும். இவ்வாறு உங்களது வழிபாட்டை வீட்டிலிருந்தபடியே எளிய முறையில் செய்து கொள்ளலாம். 

நேரம்:
படையல் போடும் நேரம் காலை - 10:20 மணிக்குள் அல்லது மதியம் 1:00 மணி முதல் 3:00 மணி வரை. 

வருடத்திற்கு ஒருமுறை வரும் ஆடியில் இந்த வெள்ளிக்கிழமைகளில் நீங்கள் அம்பாளுக்கு இவ்வாறு எளிய முறையில் வழிபாடு செய்தால் அம்பாளின் அனுக்கிரகம் உங்களுக்கு கிடைக்கும்.

click me!