Rishaba Rasi Gurupeyarchi Palan 2024 : ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?

By Asianet Tamil  |  First Published Apr 5, 2024, 10:36 AM IST

இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.


ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது.

அந்த வகையில் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், மே 1 முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறப்போகிறது என்று பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

ரிஷப ராசிக்கு இத்தனை காலம் 12-ம் வீட்டில் அதாவது மேஷ ராசியில் இருந்த குரு, தற்போது ஜென்ம குருவாக மாறி உள்ளார். அதாவது அவர் 5,7,9 இடங்களை பார்க்கிறார். இந்த குரு உங்கள் வீட்டிற்கு வருவதால் இனி நீங்கள் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. பல இடர்பாடுகள் ஏற்படலாம்.

Guru Peyarchi 2024 : குபேர யோகம் அடிக்கப் போகுது.. இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..

ஒவ்வொரு விஷயத்திலும் ஏதேனும் தடங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் இப்படி பல தடங்கல் ஏற்பட்டாலும் அந்த காரியம் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக நடக்கும். ரிஷப ராசிக்கிக்கு ஜென்ம இடத்தில் குரு மாறுவதால், 5, 7,9 ஆகிய இடங்களை பார்க்கிறார். குரு பகவனான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் முக்கியம். எனவே ரிஷப ராசிக்கு எத்தனை தடங்கள்கள் வந்தாலும், நீங்கள் நினைத்த காரியங்கள் பல கஷ்டங்களுக்கு பிறகு நடந்தேறும்.

எனினும் இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் ஏற்படும் வாய்ப்புண்டு. சிலருக்கு வெளிநாடு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும்.

வண்டி, வாகனம் ஓட்டும் போதும், போக்குவரத்தின் போதும் கவனமாக இருக்க வேண்டும். நிலம் வாங்குவதிலும், கடன் வாங்குவதிலும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுக்கு வரன் தேடும் போது அவசரப்படாமல் கவனமுடன் தேடுவது நல்லது. குடும்ப உறவில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். பொறுமையாக அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் ராமேஸ்வரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கு செல்வது நல்லது. மே 1-ம் தேதி ஆலங்குடி குருஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 

click me!