குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது.
அந்த வகையில் தற்போது மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப் போகிறது. ஆம். தற்போது மேஷ ராசியில் பயணிக்கும் குரு பகவான் மே 1-ம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த 20 ஆண்டுகளாகவே மேஷ ராசிக்காரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். பொருளாதார நிலை மோசமாக தான் இருந்திருக்கும், கழுத்தை நெறிக்கும் அளவுக்கு இருந்த கடன்களால் சிரமப்பட்டிருப்பார்கள். இத்தனை ஆண்டுகள் மிகுந்த மன உளைச்சலாகவே இருந்திருக்கும். ஆனால் இனி கவலை வேண்டாம். இந்த குரு பெயர்ச்சியால் அந்த நிலை எல்லாம் மாறப்போகிறது.
உங்களின் பொருளாதார நிலையை குரு பகவான் மாற்றப்போகிறார். எல்லா கடன்களையும் அடைத்து விடுவீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். அடுத்த 18 மாதங்கள் உங்கள் வாழ்க்கை உச்சத்தில் இருக்கப் போகிறது. ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்பம், திருமணம் என எல்லாம் கிடைக்கும்.
குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8 , 11-ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு குபேர யோகம் அடிக்கப்போகிறது. எனினும் வண்டி, வாகனம் ஓட்டும் போதும், பயணம் மேற்கொள்ளும் போதும் கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். காதல் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.