இந்த குரு பெய்ர்ச்சி மேஷ முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் சில கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக குரு பெயர்ச்சியால் சில ராசிக்கார்கள் திடீர் யோகம் ஏற்படும். இப்படி பலரின் வாழ்க்கை குரு பெயர்ச்சியால் மாறி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறப் போகிறது. ஆம். தற்போது மேஷ ராசியில் பயணிக்கும் குரு பகவான் மே 1-ம் தேதி முதல் ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி மேஷ முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம் :
கடந்த 20 ஆண்டுகளாகவே மேஷ ராசிக்காரர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர். பொருளாதார நிலை மோசமாக தான் இருந்திருக்கும், கழுத்தை நெறிக்கும் அளவுக்கு இருந்த கடன்களால் சிரமப்பட்டிருப்பார்கள். இத்தனை ஆண்டுகள் மிகுந்த மன உளைச்சலாகவே இருந்திருக்கும். ஆனால் இனி கவலை வேண்டாம். இந்த குரு பெயர்ச்சியால் அந்த நிலை எல்லாம் மாறப்போகிறது. உங்களின் பொருளாதார நிலையை குரு பகவான் மாற்றப்போகிறார். எல்லா கடன்களையும் அடைத்து விடுவீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். அடுத்த 18 மாதங்கள் உங்கள் வாழ்க்கை உச்சத்தில் இருக்கப் போகிறது. ஆரோக்கியம், மகிழ்ச்சியான குடும்பம், திருமணம் என எல்லாம் கிடைக்கும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8 , 11-ம் வீட்டில் இருப்பதால் உங்களுக்கு குபேர யோகம் அடிக்கப்போகிறது. எனினும் வண்டி, வாகனம் ஓட்டும் போதும், பயணம் மேற்கொள்ளும் போதும் கவனம் தேவை. பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும். காதல் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது. ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
ரிஷபம் :
ரிஷப ராசிக்கு இத்தனை காலம் 12-ம் வீட்டில் அதாவது மேஷ ராசியில் இருந்த குரு, தற்போது ஜென்ம குருவாக மாறி உள்ளார். அதாவது அவர் 5,7,9 இடங்களை பார்க்கிறார். இந்த குரு உங்கள் வீட்டிற்கு வருவதால் இனி நீங்கள் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. பல இடர்பாடுகள் ஏற்படலாம். ஒவ்வொரு விஷயத்திலும் ஏதேனும் தடங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் இப்படி பல தடங்கல் ஏற்பட்டாலும் அந்த காரியம் நடக்காமல் போகாது. கொஞ்சம் கஷ்டப்பட்டு முயன்றால் கண்டிப்பாக நடக்கும். ரிஷப ராசிக்கிக்கு ஜென்ம இடத்தில் குரு மாறுவதால், 5, 7,9 ஆகிய இடங்களை பார்க்கிறார். குரு பகவனான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் முக்கியம். எனவே ரிஷப ராசிக்கு எத்தனை தடங்கள்கள் வந்தாலும், நீங்கள் நினைத்த காரியங்கள் பல கஷ்டங்களுக்கு பிறகு நடந்தேறும். எனினும் இந்த குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தை பேருக்கு வாய்ப்பு உள்ளது. திருமணம் கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் ஏற்படும் வாய்ப்புண்டு. சிலருக்கு வெளிநாடு செல்லவும் வாய்ப்பு கிடைக்கும். வண்டி, வாகனம் ஓட்டும் போதும், போக்குவரத்தின் போதும் கவனமாக இருக்க வேண்டும். நிலம் வாங்குவதிலும், கடன் வாங்குவதிலும் எச்சரிக்கை தேவை. பிள்ளைகளுக்கு வரன் தேடும் போது அவசரப்படாமல் கவனமுடன் தேடுவது நல்லது. குடும்ப உறவில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும். பொறுமையாக அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிற்று பிரச்சனைகள் ஏற்படலாம். ரிஷப ராசிக்காரர்கள் ராமேஸ்வரம் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கு செல்வது நல்லது. மே 1-ம் தேதி ஆலங்குடி குருஸ்தலத்திற்கு சென்று பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மிதுனம் :
குருபகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் உங்களுக்கு நிச்சயம் பண வரவு அதிகமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் பணம் வந்து சேரும்.. எதிர்பார்த்து இருந்த இடங்களில் பண வரும். சில நேரங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து உங்களுக்கு பணம் வந்து சேரும். நீண்ட காலமாக உங்களிடம் பணம் வாங்கி பணத்தை திருப்பி தராதவர்கள், நீங்கள் கேட்காமலே பணத்தை கொடுப்பார்கள். இதனால் வீட்டில் சுப செலவுகள் அதிகரிக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் கையில் இருக்காது. அதற்கேற்றார் போல் செலவுகளும் அதிகரிக்கும். எனவே இதனை சுப செலவுகளாக மாற்றலாம். மேலும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 4, 6, 8 ஆகிய இடங்களில் வர உள்ளதால் நிச்சயம் சுப செலவுகள் அதிகரிக்கும்.
Rishaba Rasi Gurupeyarchi Palan 2024 : ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி எப்படி இருக்கும்?
மேலும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிகள் 4, 6, 8 ஆகிய இடங்களில் வீடு, நிலம், சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும். புதிய வாகனங்களையும் சிலர் வாங்கலாம். எனினும் இந்த குரு பெயர்ச்சி காலக்கத்தில் நீங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அல்லது வயிற்று தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். முதலீடுகள் செய்யும் போதும் கவனமாக செய்வது முக்கியம். முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம். அவசரப்பட்டு பெரிய முதலீடுகளை செய்யாமல், ஒருமுறைக்கு 2 முறை யோசித்த பின் முதலீடு செய்வது நல்லது. பணத்தை சேமிக்க முயற்சி செய்வது நல்லது அல்லது சுப செலவுகளாக மாற்றுவது நல்லது.
Guru Peyarchi 2024 : குபேர யோகம் அடிக்கப் போகுது.. இனி இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை தான்..
கடகம் :
இந்த குருபெயர்ச்சி கடக ராசிக்கு பல நல்ல பலன்களையே கொடுக்கும். பொருளாதார ரீதியாக நீங்கள் புதிய உயரத்தை அடையப் போகிறீர்கள். இவ்வளவு ஆண்டுகள் பணம் இல்லை, வேலை இல்லை, பார்க்கும் வேலையில் நிம்மதி இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மூலம் உங்களின் பொருளாதார நிலை உயரப்போகிறது. ஆம் உங்களுக்கு புதிய வேலை கிடைக்கப்போகிறது. பல நல்ல வேலைவாய்ப்புகள் உங்கள் வீடு தேட்டி வரும். சிலருக்கு அரசு வேலை கூட கிடைக்கும் யோகம் உள்ளது.. சிலருக்கு ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் பதவி உயர்வும் கிடைக்கும். அதே போல் இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். இத்தனை காலம் உங்களுக்கு குடல் பிரச்சனை, சிறுநீர்க பிரச்சனை போன்ற பிரச்சனைகள் இருந்திருக்கும். ஆனால் இனி அந்த பிரச்சனைகள் வராது. ஆரோக்கியத்தை பொறுத்த வரை சிறப்பாகவே இருக்கும். உங்களின் பணக்கஷ்டம் மாறி, பொருளாதாரம் முன்னேறும். தொழிலில் நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபமாக மாறும் காலம் வந்துவிட்டது. உங்களுக்கு அதே நேரம் மன நலனில் பிரச்சனை வரலாம். எவ்வளவு பணம் வந்தாலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கலாம்.. தூக்கத்தில் பிரச்சனை இருக்கலாம்.
அதிகமாக பணம் வருகிறது என்று நம்பி கடன் வாங்க வேண்டாம். கடன் பிரச்சனைகளில் மாட்டி சிக்க வேண்டாம். மற்றவர்களை காலி செய்யும் கெட்ட வேண்டாம். யாரையும் பற்றி தவறாக பேச வேண்டாம். பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. நாவை அடக்கிக்கொள்வது நல்லது. இதனால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகலாம். மே 13, 2025 வரை திருமணம் கைகூடுவதில் சிக்கல்கள் ஏற்படலாம். அதே போல் ஏற்கனவே திருமணமானவர்களின் மண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே உறவு மோசமாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு தொழில் வளர்ச்சி, சொத்து வளர்ச்சி ஆகியவற்றை வழங்கும் அதே நேரத்தில் ஆரோக்கியத்திலும், குடும்பத்திலும் சிரமங்களை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.
சிம்மம் :
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு குரு வருகிறார். இதனால் உங்களுக்கு பண மழை கொட்டப்போகிறது. குரு உங்கள் ராசிக்கு 2,4,6 இடங்களை பார்க்கிறார். இதனால் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்றே சொல்ல வேண்டும். உங்களிடம் கடன் வாங்கி தராமல் இழுத்தடித்தவர்கள் கூட உடனே கொடுத்து விடுவார்கள். தொழிலில் திடீர் யோகங்கள் கிடைக்கும். மாத ஊதியம் பெறுவோருக்கு திடீரென 2 அல்லது 3 மடங்கு சம்பளம் உயரும்.
இந்த குரு பெயர்ச்சியால் உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் மன குழப்பங்கள் நீங்கும். கணவன் மனைவி இடையே இருந்த வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தந்தை உடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் சரியாகும். உங்கள் சகோதர சகோதரிகளின் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகளும் நீங்கும். ஆனால் குரு 10-ம் இடத்தில் இருப்பதால் அரசியல்வாதிகள் கவனமுடன் இருப்பது நல்லது. உங்கள் பதவி பறி போகும் ஆபத்து உள்ளது. நிலம், வீடு வாங்கும் போது ஆவணங்களை சரி பார்த்து வாங்குவது நல்லது. பிரச்சனைகள் இருக்கும் இடத்தை வாங்குவதை தவிர்க்கவும். நீங்கள் ஏமாற்றமடையும் வாய்ப்புகள் உள்ளதால் எதையும் தீர யோசித்து செய்வது நல்லது. எந்த விஷயத்திலும் ரிஸ்க் எடுக்க வேண்டும். திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும்.
கன்னி :
கன்னி ராசிக்காரர்கள் கடந்த 5 ஆண்டுகளாக படாத கஷ்டம் பட்டிருப்பார்கள். வேலை இல்லாத, வருமானம் இல்லாத நிலை இருந்திருக்கும். வேலை இருந்தால் சம்பளம் இல்லை, அப்படியே சம்பளம் இருந்தாலும் 10 நாட்களுக்கு தான் சம்பளம் இருந்திருக்கும் மீதம் 20 நாட்களுக்கு செலவுக்கு காசு இல்லாமல் சிரமப்பட்டிருப்பீர்கள். கடன் பிரச்சனை, சொத்துக்களை இழந்தது என பல பிரச்சனைகளை பார்த்திருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் பல பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். காதல் வாழ்க்கை, திருமன வாழ்க்கையில் மோசமான சூழலை எதிர்கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் இனி மாறப் போகிறது. இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு இருந்தார். அவர் தற்போது 9-ம் இடத்திற்கு வரப்போகிறார். இதனால் உங்களின் பொருளாதார நிலை உயரப்போகிறது. பணம் கொட்டப் போகிறது. இந்த நேரத்தில் நீங்கள் தொழில் தொடங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வீடு, நிலம், சொத்து வாங்கும் வாய்ப்பு உருவாகும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். இனி கெட்டதெல்லாம் விலகும். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் வந்துவிட்டது. எனினும் இந்த காலக்கட்டத்தில் உங்களின் கோபம் அதிகரிக்கும். வாயை கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச வேண்டாம். வீண் சண்டைக்கு செல்ல வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். எனவே கவனமாக யோசித்து பேசுவது நல்லது. பிள்ளையார்பட்டி கோயிலுக்கு செல்வதால் பல பயன்கள் கிடைக்கும்.
துலாம் :
உங்கள் 7-ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு பகவனான் தற்போது 8-ம் வீட்டிற்கு நுழைகிறார். 8-ல் குரு வந்துள்ளதால் எல்லாம் தள்ளிப்போகும் என்று நினைக்க வேண்டாம். 8-ல் அமர்ந்தாலும் குரு முக்கியமான வீடுகளை பார்ப்பதால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். தள்ளிப்போன வெளிநாட்டு பயணம் கூடி வரும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்புள்ளது. எனினும் செலவுகள் வந்து கொண்டே தான் இருக்கும். கணவன் – மனைவிக்குள் ஆரோக்கியம் வாக்குவாதங்கள் எழ வாய்ப்புள்ளது. கணவருக்கு உத்தியோகத்தில் அலைச்சலும், இடமாற்றமும் இருக்கும். சிலருகு வேலைச்சுமையும் இருக்கும். குரு 8-ல் மறைவதால் தங்க ஆபரணங்களை வாங்கவோ கடனாக கொடுக்கவோ வேண்டம். குடும்பத்தினருடன் வெளியூர் செல்லும் போது வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்வது நல்லது. குரு 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்கு வீடு, மனை வாங்க கடன் உதவி கிடைக்கும். புது வீட்டில் குடிபுகும் யோகம் உருவாகும். முடிவுகள் எடுப்பதில் குழப்பமும், தடுமாற்றமும் இருந்து கொண்டே இருக்கும்.
செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். சில வேலைகளை போராடி தான் முடிக்க வேண்டி இருக்கும். ஞாபக மறதியால் தங்க ஆபரணங்களை இழக்க நெரிடும். முன்கோபத்தால் பகைவர்களை பகைத்து கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிட வேண்டாம். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இந்த குரு மாற்றம் ஒருவித படபடப்பையும், வேலைச்சுமையையும் தந்தாலும் உத்தியோகத்தில் அதிக நேரம் உழைக்க வேண்டி வரும். தஞ்சாவூர் – திருகருகாவூர் செல்லும் வழியில் தென்குடிதிட்டை என்ற ஊரில் உள்ள சிவாலயத்தில் ராஜகுருவாக அருள் பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும்..
விருச்சிகம் :
கடந்த ஓராண்டாக உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து உங்களை பாடாய்ப்படுத்தி வந்த குருபகவான் தற்போது 7-ம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். குரு பகவான உங்கள் ராசியை பார்க்க இருப்பதால் கவலையுடன் இருந்த உங்கள் முகத்தில் இனி மகிழ்ச்சி மலரும். சின்ன சின்ன பிரச்சனைகளை கூட பெரிதாக்கி அதனால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். அடுத்தடுத்து நீங்கள் சந்தித்த கஷ்டங்கள், பிரச்சனைகள், அவமானங்கள், பிரச்சனைகள் இவற்றில் இருந்து விடுபட்டு முன்னேறுவீர்கள். கணவருடன் இருந்து வந்த பகைமை நீங்கும். சந்தேகம் விலகும். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதால் ஒற்றுமை அதிகரிக்கும்.
வீட்டில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் அரங்கேறும். உங்களை எதிர்த்த உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் அடங்கிப்போவார்கள், வளைந்து வந்து பேசுவார்கள். வருமான அதிகரிக்கும், வசதிகள் கூடும். சிலருக்கு வீடு மனை வாங்கும் யோகம் உண்டும். தள்ளிப்போன திருமணம் முடியும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும், அழகு கூடும். தன்னிச்சையாக சில முடிவுகளை எடுப்பீர்கள், கணவரின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரர் வழியில் ஆதாயம் உண்டும். உங்கள் திறமைக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நபர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள்.
விலை உயர்ந்த ரத்தினங்கள், ஆபரணங்களை வாங்குவீர்கள். சின்ன சின்ன வேலைகளை கூட அலைந்து திரிந்து தான் முடிக்க வேண்டி வரும். சொத்து வாங்கும் போது முறையான பட்டா, வில்லங்க சான்றிதழ்களை எல்லாம் வழக்கறிஞர்களை வைத்து சரி பார்த்துவிட்டு வாங்குவது நல்லது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது.
புதிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.
சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்கலாம். தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் எல்லாம் முடிவுக்கு வரும். எந்த காரியத்திலும் வெற்றி கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். நிரந்தர வருமானம் கிடைக்க வழி தேடுவீர்கள். திடீர் யோகம் உண்டாகும், சொத்து வாங்குவீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் துலங்கும் வகையில் இருப்பதுடன், பணவரவையும் தரும். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் ஏரையூர் எனும் ஊரில் உள்ள சிவாலயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். வசதிகள் பெருகும்.
தனசு :
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்த குருபகவான் தற்போது 6-ம் வீட்டிற்கு செல்கிறார். உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. செலவுகள் கட்டுங்கடங்காமல் போய்க் கொண்டிருக்கும். உறவினர்கள், தோழிகள் வீட்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் செலவு செய்து பார்க்க வேண்டிய சூழல் இருக்கும். நீங்கள் சாதாரணமாக பேசுவது கூட சண்டையில் போய் முடியும். முன்கோபத்தை குறைத்து கொள்வது. உங்களின் தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வது நல்லது. புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். வீடு, மனை சொத்து வாங்க வங்கி கடன் உதவி கிடைக்கும். பணவரவு ஓரளவு நன்றாகவே இருக்கும், எதிர்பார்த்த தேதியில் பணம் கிடைக்காவிட்டால்ம் கடைசி நேரத்தில் பணம் வந்து சேரும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். வீட்டில் திருமணம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சிறு சிறு விபத்துகள், உடல் நல குறைவுகள் வந்து போகும். திடீர் பயணம், வீண் செலவு அதிகரிக்கும்.
விலகி சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்க வேண்டாம். தேவையில்லாமல் யாருக்கும் எந்த உத்தரவாதமும் கொடுக்க வேண்டாம். சின்ன சின்ன அவமானங்கள் நேரிடலாம். உங்களை பற்றிய விமர்சனங்களும் வீண் பழியும் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் கவனமாக முதலீடு செய்வது நல்லது. பங்கு தாரர்கள் உங்கள் ஆலோசனையை கேட்டுக் கொள்வார்கள். இடைத்தரர்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் சிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் தான் காரணம் என்று தவறாக புரிந்துகொள்ள கூடும். சிலர் பணியில் இருந்து கட்டாய ஓய்வு பெற வேண்டிய சூழல் உருவாகும். இந்த குரு பெயர்ச்சி உங்கள் இமேஜை ஒரு படி குறைத்தாலும், உடல்நலக் குறைவை தந்தாலும், சகிப்பு தன்மையாலும் சாதூர்ய பேச்சாலும் ஓரளவு முன்னேற வைக்கும். தேனி மாவட்டம், குச்சனூரில் உள்ள சிவாலயத்தில் யானை வாகனத்துடன் ராஜ தோரணையில் அருள் பாலிக்கும் ஸ்ரீ ராஜ யோக தட்சிணாமூர்த்தி வியாழக்கிழமையில் கொண்டைக்கடலை மாலை சாலை வழிபடுங்கள். வெற்றிகள் தேடி வரும்.
மகரம் :
குரு பகவான் கடந்த ஓராண்டாக 4-ம் வீட்டில் அமர்ந்து உங்களை கஷ்டப்படுத்தி இருப்பார். நிம்மதி இல்லாமலும், தூக்கம் இல்லாமலும் இருந்திருப்பீர்கள். ஆனால் தற்போது குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தடைகளும், தடுமாற்றங்களும் விலகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள்.
பாதியில் நின்று போன வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப புது வீடு அமையும். மகளுக்கு திருமணம் சிறப்பாக நடைபெறும். மகனுக்கு வேலை கிடைக்கும். நோய்கள் தீரும். இளமை அழகு கூடும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்கள் எல்லாம் மீண்டும் பணத்தை திருப்பி தருவார்கள். புது முதலீடு செய்து தொழில் தொடங்குவீர்கள். தந்தை வழியில் இருந்த மனக்கசப்பு நீங்கும். தந்தை வழி சொத்து சேரும்.
திடீர் செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அரசு காரியங்களில் அலட்சியம் காட்ட வேண்டாம். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள். ஆடை ஆபரணங்களையும் வாங்குவீர்கள். பிள்ளை பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை வரம் கிடைக்கும். புது வாகனம் வாங்கும் யோகம் இருக்கும். பெரிய பதவிகள் கிடைக்கும். வெளுத்ததை எல்லாம் பாலாக நினைத்து ஏமாற வேண்டாம். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்தில் அவ்வப்போது சச்சரவுகள் வந்து போகும். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்த்து விடுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உயர்கல்வி, உத்தியோகத்திற்கு குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய சூழல் உருவாகும். நீங்கள் யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக நினைத்துக் கொள்ளலாம்.
தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நீங்கள் உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தம் கிடைக்கும். தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். சக ஊழியர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். இழந்த மரியாதை, மதிப்பையும் மீண்டும் பெறுவீர்கள். தள்ளிப் போன பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி திடீர் யோகங்களையும் செல்வ செழிப்பையும் அந்தஸ்தையும் உங்களுக்கு அள்ளித்தரும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் என்ற ஊரில் உள்ள சிவாலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். நினைத்த காரியங்கள் கைகூடும்.
கும்பம் :
கடந்த ஓராண்டாக குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை பல விதங்களிலும் முடக்கி போட்டிருப்பார். ஆனால் தற்போது குரு 4-ம் வீட்டில் அமர்வதால் இனி ஓரளவு உங்களுக்கு நல்ல நடக்கும். உங்களுக்கு இருந்த தயக்கம், தடுமாற்றங்கள் நீங்கும். உங்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை நீங்கி உங்கள் பலத்தை நீங்களே புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவது நல்லது. அனுமதி பெறாமல் வீடு கட்ட வேண்டாம். பூர்வீக சொத்து பிரச்சனையில் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்வி திருமண விஷயத்தில் அலைச்சல் அதிகமாக இருக்கும். மற்றவர்களின் பெயரில் உள்ள வாகனத்தை பயன்படுத்த வேண்டாம். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வேலை விண்ணப்பித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சின்ன சின்ன விபத்துகள் ஏற்பட கூடும். வயிற்று வலி, சிறுநீர் பாதை தொற்று, நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகள் வந்து போகும். பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள், வேலை மாறுவீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வரக்கூடும். பார்வைக் கோளாறு வரலாம். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் யாரும் தலையிட அனுமதிக்க வேண்டாம். சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். தனிநபர் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். பெரிய முதலீடுகளை செய்ய வேண்டாம். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். திடீரென அறிமுகமானவர்களை நம்பி, புதிய தொழில், புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். உத்தியோகத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் அங்கீகாரமும், பாராட்டுகளும் இல்லை என்று ஆதங்கப்படுவீர்கள். சில மாதங்கள் கழித்து புதிய பொறுப்புகள் வரக்கூடும். இந்த குரு பெயர்ச்சி வேலைச்சுமை, பணப் பற்றாக்குறையை தந்தாலும் ஓரளவு உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையும். சென்னை – திருவொற்றியூரில் உள்ள ஸ்ரீ வடிவுடை அம்மன் ஆலயம் முன்புள்ள ஸ்ரீ தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வணங்கினால் சுபிட்சம் உண்டாகும்.
மீனம் :
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு செல்வாக்கையும், செல்வ செழிப்பையும் தந்த குருபகவான், தற்போது உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் மறைகிறார். 3-ம் இடத்து குரு முடக்கிவிடுமே என்று கவலைப்பட வேண்டாம். உங்கள் ராசிநாதன் குரு என்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பணவரவு தொடரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.புது வாகனம், வீடு வாங்கும் யோகம் அமையும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உங்களிடம் மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. திட்டமிடாமல் செய்யும் விஷயங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். சின்ன சின்ன வேலைகளை கூட முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் போராடி தான் முடிக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். மாமியார், மாமனார் வகையில் மனக்கசப்புகள் வந்து பொகும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். சிலர் புதிதாக முதலீடு செய்து புது தொழில் தொடங்க வாய்ப்புண்டு. செலவுகளும், பயணங்களும் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை. தினசரி நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வெற்றுத்தாளில் கையெழுத்திட்டு சிக்கி கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார். உத்தியோகத்தில் இருந்த அலட்சிய போக்கு மாறும். மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். கேட்ட இடத்திற்கு பணியிட மாற்றம் கிடைக்கும். உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். இந்த குரு மாற்றம் சின்ன சின்ன அலைச்சலையும், செலவுகளையும் தந்தாலும் உங்களை தொடர்ந்து வெற்றி பாதையில் பயணிக்க உதவும்.