This Week Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் இந்த 3 விஷயங்களில் ரொம்ப எச்சரிக்கையா இருங்க.!

Published : Dec 29, 2025, 05:00 PM IST
Intha Vaara Rasi Palan Kumbam

சுருக்கம்

Kumba Rasi This Week Rasi Palan: டிசம்பர் 29 முதல் ஜனவரி 04 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் கும்ப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

இந்த வார ராசிப்பலன்கள் - கும்பம்

கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு தன்னம்பிக்கையைத் தரும் வாரமாக இருக்கும். ராகு பகவானின் நிலை காரணமாக அவ்வப்போது குழப்பங்கள் தோன்றினாலும், குரு பகவானின் பார்வை இருப்பதால் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். திட்டமிட்ட காரியங்கள் தாமதமானாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். தேவையில்லாத விவாதங்களை தவிர்க்க வேண்டியது அவசியம்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சூரிய பகவானின் நிலையால் எதிர்பாராத லாபம் கிடைக்கும். ஏழரை சனியின் தாக்கம் இருப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரலாம். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆடம்பரப. பொருட்கள் வாங்குவதை விடுத்து, சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் மன அழுத்தம் ஏற்படலாம். போதிய உறக்கமும், சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அவசியம். கால்கள் அல்லது பாதங்களில் வலி அல்லது எரிச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. யோகா மற்றும் தியானம் செய்வது மனதிற்கு புத்துணர்ச்சியளிக்கும்.

கல்வி:

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். இருப்பினும் ராகு பகவானின் தாக்கத்தால் கவனச் சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கலாம். ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களின் ஆலோசனை உங்களுக்கு பெரிதும் உதவும்.

தொழில் மற்றும் வியாபாரம்:

அலுவலகத்தில் வேலைப் பளு கூடுதலாக இருக்கும். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே அனுசரித்துச் செல்லவும். நிர்வாகத்திடம் புதிய கோரிக்கைகளை வைத்து இது சரியான நேரம் அல்ல. எனவே பொறுமை காக்கவும். தொழில் செய்து வருபவர்கள் புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது. கூட்டாளிகளுடன் வெளிப்படைத் தன்மை தேவை. வெளிநாடு தொடர்பான வணிகம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம்.

குடும்ப உறவுகள்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும். கேது பகவானின் நிலை காரணமாக வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பிரிந்த உறவுகள் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் முன்னேற்றம் மூலம் உங்களுக்கு பெருமை கிடைக்கும்.

பரிகாரம்:

ஓம் நமசிவாய மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்வது நல்லது. விஷ்ணு பகவான் சன்னதியில் கற்கண்னு நைவேத்யம் படைத்து அதை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குங்கள். இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவது பலன்களை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

This Week Rasi Palan: மகர ராசி நேயர்களே, உங்கள் பிரச்சனைகள் எல்லாம் இந்த வாரம் முடிவுக்கு வரப்போகுது.!
This Week Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, அடுத்த 7 நாட்களுக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.! தொழிலில் அமோக லாபம்.!