
ரிஷப ராசி நேயர்களே, புத்தாண்டின் தொடக்கமான இந்த வாரம் உங்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும். கடந்த சில மாதங்களாக இருந்த பிரச்சனைகள் விலகி, மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். முக்கிய பொறுப்புகள் தேடி வரும். எடுத்த காரியத்தை பிடிவாதமாக இருந்து முடித்து வெற்றி பெறுவீர்கள். புதிய உறவுகள் அல்லது நட்புகள் தேடி வரும்.
தன காரகன் குரு பகவானின் நிலை காரணமாக இந்த வாரம் பண வரவிற்கு எந்த குறைவும் ஏற்படாது. இதுவரை உங்களை வாட்டி வதைத்து வந்த பழைய கடன்களை அடைப்பதற்கான சூழல் உருவாகும். சேமிப்பு உயரும். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பங்குச் சந்தை மற்றும் முதலீடுகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் வரும்.
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இருப்பினும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். சூரிய பகவானின் நிலை காரணமாக கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். உடல் உஷ்ணம் தொடர்பாக உபாதைகள் ஏற்படக்கூடும். வேலைப்பளு காரணமாக சிறு சோர்வு ஏற்படலாம். தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது.
மாணவர்களுக்கு இந்த வாரம் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உயர் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். மேலதிகாரிகளுடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கி, இணக்கமான சூழல் நிலவும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கணிசமான லாபத்தைப் பெறலாம். இரும்பு, ரசாயனம் மற்றும் ஆடை சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு அமோக வளர்ச்சி காணப்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். சுப நிகழ்ச்சி குறித்த பேச்சு வார்த்தைகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை தொடங்குவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, மீண்டும் இணைவீர்கள். வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமாக அமையும்.
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை பூ சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபடவும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அல்லது வெற்றிலை மாலை சாற்றி வழிபட தடைகள் நீங்கும். இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது. “ஓம் நமோ நாராயணாய:” மந்திரத்தை தினமும் 108 முறை பாராயணம் செய்யவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)