
மேஷ ராசி நேயர்களே, புத்தாண்டு பிறக்கும் இந்த வேளையில் மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையும். கடந்த சில வாரங்களாக இருந்த மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ராகு பகவானின் நிலை காரணமாவ அடுத்தடுத்து நல்ல நிகழ்வுகள் நடக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கும், ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வதற்கும் வாய்ப்புகள் உண்டாகும்.
லாப ஸ்தானத்தில் ராகு பகவான் இருப்பதன் காரணமாக பணவரவு சரளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வந்து சேராமல் இருந்த கடன்கள் வசூலாகும். புத்தாண்டில் பழைய கடன்களை அடைப்பதற்கான வழிகள் பிறக்கும். சுப காரியங்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகள் மூலம் லாபத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும் ஆடம்பர செலவுகள் அதிகரிக்க கூடும், என்பதால் பட்ஜெட் படி செலவு செய்வது நல்லது
இந்த வாரம் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக பித்தம் அல்லது உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா செய்வது நல்லது. வயதானவர்களுக்கு கால் வலி அல்லது மூட்டு வலி தொடர்பான உபாதைகள் வந்து நீங்கும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளவும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது விபத்துக்களை தவிர்க்க உதவும்.
மாணவர்களுக்கு இந்த வாரம் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமான படங்களைக் கூட எளிதாக புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வருபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் உங்களுக்கு உதவியாக இருக்கும். கவனச் சிதறல் ஏற்படாமல் இருப்பதற்கு தனிமையில் படிப்பது நல்லது. மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களின் கனவு நனவாகும்.
இந்த வாரம் வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கடினமான பணிகளையும் சுலபமாக முடிப்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளை செய்ய சரியான சூழல் உருவாகும். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சனி பகவானின் நிலை காரணமாக தொழில் ரீதியாக சில அலைச்சல்கள் ஏற்படலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். குரு பகவானின் நிலை காரணமாக வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு. கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களை பெருமை அடையச் செய்யும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான கவலைகள் நீங்கும். உறவுகளுக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ரநாமம் அல்லது அபிராமி அந்தாதி பாராயணம் செய்வது நன்மைகளைத் தரும். சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது ஏழரை சனியின் தாக்கத்தைக் குறைக்கும். இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது புண்ணியத்தை தரும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, பறவைகளுக்கு தண்ணீர் வைப்பது ஆகியவை நேர்மறைப் பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)