Thulam Rasi Palan Dec 27: துலாம் ராசி நேயர்களே, சுக்கிர பகவான் நிலையால் இன்று நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.!

Published : Dec 26, 2025, 05:04 PM IST
Thulam Rasi Today Rasi palan

சுருக்கம்

Dec 27 Thulam Rasi Palan : டிசம்பர் 27, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

டிசம்பர் 27, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான் சாதகமான நிலையில் அமர்ந்துள்ளார். இதன் காரணமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். எடுத்த காரியத்தில் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றிகளை அடைவீர்கள்.

நிதி நிலைமை:

இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் வரக்கூடும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது எதிர்காலத்திற்கு நன்மை தரும். பழைய கடன்களை திருப்பி செலுத்துவதற்கான சாதகமான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொழுது நிதானம் தேவை.

தனிப்பட்ட வாழ்க்கை:

வாழ்க்கைத் துணையுடன் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. செரிமானம் தொடர்பான உபாதைகள் வரக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். கல்வியில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்க்கவும்.

பரிகாரங்கள்:

ஏற்படும் தடைகள் நீங்குவதற்கு விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படவும், மன அமைதிக்கும் மகாலட்சுமி தாயாரை வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு பால் அல்லது இனிப்புகளை தானமாக வழங்குவது தோஷங்களை நீக்கி நற்பலன்களைத் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Viruchiga Rasi Palan Dec 27: விருச்சிக ராசி நேயர்களே, இன்று நீங்கள் எதிர்பாராத நல்ல விஷயம் ஒன்று நடக்கப்போகுது.!
Dhanusu Rasi Palan Dec 27: தனுசு ராசி நேயர்களே, அர்த்தாஷ்டம சனியால் இன்று இந்த பிரச்சனைகள் வரலாம்.! கவனம்.!