உங்கள் கடனை நீக்க உதவும் எளிய பரிகாரம் இங்கே.
நம்மில் பல பேர் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு கடனை அடைப்பதற்காக மற்றோரு கடன் வாங்குவதுண்டு. இப்படி கடனாக வாங்கி வாங்கி அவர்கள் தங்களது வாழ்க்கையை ஒட்டுகின்றனர். மேலும் சில வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் வட்டி கொடுத்து கஷ்டப்பட்டு வருகின்றனர். ஜோதிடத்தில் இதற்கு என ஒரு பரிகாரம் உள்ளது. அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
கடன் தீர கொடுக்க வேண்டிய தானம்:
நாம் சம்பாதிக்கும் பணத்திலிருந்து ஒரு சிறு தொகையை இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆதரவற்ற இல்லங்களுக்கும், வீதியில் யாசகம் கேட்டு வருபவர்களுக்கும் உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்ய வேண்டும். இந்த தானத்தையெல்லாம் நீங்கள் பணமாக செய்யாமல் உணவாக செய்தால் சிறப்பான பலனை பெறுவீர்கள்.
இதையும் படிங்க: சீக்கிரம் கடன் அடைபட! செவ்வாய்கிழமை இந்த எளிய பரிகாரம் செய்யுங்க! முருகபெருமான் உடனே உதவுவார்!
பசுவிற்கு தானம்:
முப்பது முக்கோடி தேவர்கள் வாழக்கூடிய ஒரு உயிரினம் பசு. பசுவை நாம் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கிறோம். ஆகையால், நீங்கள் உங்கள் கையால் பசு மாட்டிற்கு எள்ளு புண்ணாக்கு வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பது உங்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும். மேலும் உங்களது ஜாதகத்தில் தோஷம் ஏதாவது இருந்தால், அதனை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்கு உண்டு. மாட்டிற்கு உங்களால் எந்த அளவுக்கு எள்ளு புண்ணாக்கு வாங்கி கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு வாங்கி கொடுக்கலாம். அதுபோல் நீங்கள் வாங்கி கொடுத்த தீவனத்தை பசு மாடு சாப்பிட சாப்பிட உங்களுடைய கடன் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். குறிப்பாக, நீங்கள் இந்த பரிகாரத்தை மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ தொடர்ந்து செய்து வர வேண்டும். ஒரு முறை செய்த பின் பலனை எதிர் பார்க்கக் கூடாது. கடன் நீங்கும் வரை செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: பஞ்ச கவ்ய தீபம் பத்தி தெரியுமா? கடன் பிரச்சினை தீர இந்த விளக்கை இப்படித்தான் ஏற்றணும்!