குப்பைக் கூழ் படிவுகளை பயன்படுத்தி கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கும் முறை..
** கோழிப் பண்ணையில் தரையின் மேற்புறம் 5-10 செ.மீ. உயரம் வரை உலர்ந்த நார்க்கழிவினை அடுக்குகளாக பரப்பி, இதன் மேல் பறவைகள் வளர்க்கப்பட்டு எச்சங்கள் சேகரிக்கப்படுகின்றன.
** மூன்று மாதங்களுக்குப் பின் ஓரளவு சிதைவடைந்த நார்க்கழிவு, கோழி எச்சங்கள் மற்றும் இறகுகள் எரு கொட்டகைக்கு மாற்றப்படுகின்றது.
** பின் நிழலின் கீழ் குவியலாக்கப்படுகின்றன. குவியலின் ஈரப்பதம் 40-50% வரை பராமரிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒரு முறை இடைவிடாமல் கிளறிவிட வேண்டும்.
** 30 நாட்களுக்குள் நல்ல தரம் வாய்ந்த மக்கிய உரம் கிடைக்கும்.
** 120 நாட்களில் வைத்தால் மக்கிய உரம் தயார்.
இந்த மக்கிய உரத்தில் இருக்கும் சத்துகள்
தழைச்சத்த : 2.13%
மணிச்சத்து : 2.40%
சாம்பல்சத்து : 2.03%
கரிம - தழைச்சத்து விகிதம் :14.02