வைக்கோல் மூலம் கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி?

 |  First Published Dec 22, 2017, 1:09 PM IST
fertilisers from grass waste



 

வைக்கோல் மூலம் கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கும் முறை..

Latest Videos

undefined

** குறிப்பிட்ட அளவு புதிய கோழி எச்சங்கள் சேகரிக்கப்பட்டு, பிறகு கழிவு மக்குவதற்கு ஏதுவான கரிமம் - தழைச்சத்தின் விகிதம் 25 முதல் 30 வரை உள்ளவாறு 2 செ.மீ.க்கும் குறைவாக துண்டாக்கப்பட்ட வைக்கோல் உடன் கலக்கப்படுகிறது. 

** ஒரு டன் கழிவுகளுடன் 250 கிராம் அடங்கிய 5 பாக்கெட்டுகள் சிப்பிக்காளான் விதை உட்செலுத்தப்பட்டு பின்பு கோழி எரு மற்றும் வைக்கோல் கலவை நிழலின் கீழ் குவியலாக்கப்படுகிறது. 

** குவியலின் ஈரப்பதம்  40 - 50% இருக்குமாறு பராமரிக்கவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளிப்பதுடன் 21, 35, 42-ஆம் நாளில் நன்றாகக் கிளறிவிட வேண்டும். 

** இவ்வாறு செய்வதின் மூலம் 50 நாட்களுக்குள் கோழிப்பண்ணைக் கழிவு மற்றும் வைக்கோல் கலவையானது முழுமையான மக்கிய உரமாக மாற்றப்படுகிறது.

மட்கிய உரத்தில் இருக்கும் சத்துக்கள் 

தழைச்சத்து :  1.89%

மணிச்சத்து  :  1.83%

சாம்பல்சத்து : 1.34%

கரிம - தழைச்சத்து விகிதம்  :12.20

click me!