நார்க்கழிவு மற்றும் சிப்பிக் காளான் விதையை பயன்படுத்தி கூட கோழிப்பண்ணைக் கழிவில் மக்கிய உரம் தயாரிக்கலாம்.
undefined
** குறிப்பிட்ட அளவு புதிய கோழிப்பண்ணைக் கழிவுகளை சேகரித்து, மக்குவதற்கு ஏதுவாக கரிமம்-தழைச்சத்தின் விகிதம் 25-30 உள்ளவாறு, உலர்ந்த நார்க் கழிவுடன் 1:15 விகிதத்தில் கலக்கப்படுகிறது.
** சிப்பிக்காளான் விதை, ஒரு டன் கழிவுப்பொருளுக்கு 2 பாக்கெட்டுகள் என்ற விகிதத்தில் சேர்த்து பின் கலவை நிழலின் கீழ் குவியலாக்கப்படுகிறது.
** குவியலின் ஈரப்பதம் 40-50% வரை பராமரிக்கப்பட்டு 21,28 மற்றும 35 ஆம் நாளில் இடைவிடாமல் கிளறிவிடவேண்டும்.
** 28-ஆம் நாள் கிளறும் போது சிப்பிக்காளான் விதை மீண்டும் ஒரு டன்னுக்கு 2 பாக்கெட்டுகள் சேர்க்கப்பட வேண்டும்.
** 45 நாட்களில் நன்கு தரம் உள்ள மக்கிய உரம் பெறப்படுகின்றது.
மக்கிய உரத்தில் உள்ள சத்துக்கள் .
தழைச்சத்து : 2.08%
மணிச்சத்து : 2.61%
சாம்பல்ச்சத்து : 0.94%
கரிம - தழைச்சத்து விகிதம் : 13.54