உயிர்வாழ தேவையான காய்கறிகளை நிறைய சாப்பிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யுங்க..
Amazon, flipcartல பத்தாயிரம் ரூபாய் மொபைல் ஐயாயிரத்துக்கு கிடைக்குதுன்னு ஆச்சரியப் படுறாங்க. ஒரு இலட்சம் ரூபாய் டிவி ஐம்பதாயிரத்துக்கு தர்றாங்கன்னு பெருமை பேசுறாங்க...
ஆனால் நம் ஊரில் தக்காளி, கத்தரிக்காய் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கு வித்ததையும், பாகற்காய் பெரிய கூறு பத்து ரூபாய்க்கு வித்ததையும் பார்த்து யாரும் ஆச்சரியப்படவோ, பெருமை பேசவோ மாட்டேங்குறாங்களே....
பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் மொபைல்கள் தயாரிக்க தேவைப்படும் சிலிகான்கள், உலோகங்கள் கண்டிப்பாக ஆயிரம் இரண்டாயிரத்தை தாண்டாது என்பது எண்ணம்
ஆனால் தக்காளி விளைவிக்க தண்ணீர் பாய்ச்சும் செலவு, உரம் பூச்சிமருந்து செலவு, தக்காளி பறிக்க ஆகும் செலவு என எல்லா செலவுகளையும் கூட்டினால் தக்காளி ஒரு கிலோ அசலே இருபது ரூபாய் ஆகிவிடும். ஆனால் தற்போது பத்து ரூபாய்க்கு விற்கிறார்கள்.
பத்து வருடத்திற்கு முன் விற்ற விலையிலேயே காய்கறிகள் இன்றும் விற்பனையாகிறது என்பதை நினைத்து சந்தோசப்படுவதா!!!
அல்லது கட்டுப்படியாகாமல் , அழுகிப் போய்விடுமே என வேறுவழியில்லாமல் நஷ்டத்திற்கு விற்கும் விவசாயிகளின் பரிதாப நிலையை நினைத்து பரிதாபப்படுவதா!!!
ஒன்னுமே புரியல.?
மதிப்பற்ற எலக்ட்ரானிக் பொருள்களை விலைகுறைத்து விற்கும் amazon, flippcortகளை கொண்டாடும் நண்பர்களே...
உயிர்வாழ தேவையான காய்கறிகளை நஷ்டத்திற்கே விற்கும் விவசாயிகளை நினைத்து பெருமைப்படுங்கள், பரிதாபப்படுங்கள்..
முடிந்தால் காய்கறிகளை நிறைய சாப்பிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யுங்கள்..
உணர்ந்திடுவோம் , கைகொடுப்போம் நமது அடிப்படை வாழ்வுஆதாரமான விவசாயத்திற்கு...