வேளாண்மையில் களை கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்றுவது அவசியம். ஏன்?

 |  First Published Feb 3, 2017, 12:45 PM IST



பயிர் உற்பத்தியில் மேலாண்மை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பயிர்களுக்கு அளிக்கப்படும் சத்தையும் நீரையும், பெருமளவில் களை எடுத்துக் கொள்வதால் பயிர் வளர்ச்சி பாதிப்படைந்து விளைச்சல் குறைகிறது. களைகளை அகற்ற பயன்படுத்தும் களைக்கொல்லிகளின் உபயோகம் குறைக்கப்பட்டது.

ரசாயன களைக் கொல்லிகளில் மாறாக இயல் மற்றும் உயிர்வழி களைக்கட்டுப்பாட்டு முறைகள் அங்கக வேளாண்மைக்கு உகந்த முறைகளாக பின்பற்ற கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி மண்வளமும் பாதுகாக்கப்படுகின்றது.

Tap to resize

Latest Videos

அங்கக வேளாண்மையில் பின்பற்றப்பட வேண்டிய களைக்கட்டுப்பாட்டு முறைகள் இதோ...

கோடை உழவு செய்து களை விதைகளை வெப்பத்திற்கு வெளிப்படுத்தி அழித்தல்,

உரக்குழிகளின் வாயிலாக களை விதைகள் வயலுக்கு வர வாய்ப்புள்ளதால் உரக்குழிகளை சுத்தமாக வைத்திருத்தல்,

நன்கு மக்கிய தொழு உரத்தை மட்டுமே வயலில் இடுதல்,

களை விதைகளை பண்ணைக்கருவிகள், வேளாண் இயந்திரங்கள் வாயிலாக வயலுக்குள் வராதவாறு பாதுகாத்தல்,

பயிரிடாத இடங்களையும் சுகாதாரமாக பராமரித்தல்,

விதைபாத்தி அமைத்து களைகளை அகற்றிவிட்டு சாகுபடி செய்தல்,

களைகளற்ற உபயோகித்தல் போன்றவற்றின் மூலம் களை தடுப்பு முறைகள் மேற்கொள்ளலாம்.

மேலும் களைகளை கட்டுப்படுத்த  மண்ணைக் கிளறி நீண்டகால களைகளின் கிழங்குகளை அப்புறப்படுத்தலாம்.

கைகள் மூலம் களைகளை அகற்றலாம்.

உயிரில் முறைகளை கையாண்டு களைகளை கட்டுப்படுத்தலாம்.

களைக்கட்டுப்பாட்டில் பயிர்சாகுபடி முறைகளை மேற்கொள்ள வேகமாக வளரும் அகன்ற இலைப்பயிர்களை சாகுபடி செய்வதால் களைகளின் ஆதிக்கம் குறையும்.

பரிந்துரைக்கப்படும் பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்படும் காலத்தில் நடவு செய்ய வேண்டும்.

வடக்கு - தெற்கு திசைகளில் பயிர் செய்வதால் பயிர்களுக்கு நல்ல சூரிய வெளிச்சம் கிடைத்து களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

அருகம்புல் போன்ற களைகளின் கிழங்குகளை கட்டுப்படுத்த ஊடுபயிர் சாகுபடி செய்யலாம்.

இலைகள், காகிதம், பிளாஸ்டிக் படலங்கள், வைக்கோல் ஆகியவற்றை கொண்டு மூடாக்கு அமைத்து களைகளை கட்டுப்படுத்தலாம்

click me!