கொழுத்த லாபம் வேண்டுமா? கொட்டில் முறை ஆடு வளர்ப்பே சரி…

 |  First Published Feb 3, 2017, 12:38 PM IST



மூன்றாண்டுகளுக்கு முன், பங்குதாரர்கள் சிவகாசி, திலகாவுடன் சேர்ந்து ஆறுமாத குட்டியாக, போயர், சிரோகி, ஜமுனாபாரி ரக 22 குட்டிகள் வாங்கினோம். நிலம் என்னிடம் இல்லை. மற்ற இருவரும் நிலம் தந்தார்கள் என்றுத் தனது கதையைத் தொடங்கினார் சாமி.

தரையிலிருந்து பத்தடி உயரத்தில் மரக் கொட்டகை, அதில் ஆறடுக்காய் பிரித்து அறைகளை உருவாக்கினோம். ஒவ்வொரு அறைக்கும் தனியாக இரும்புக் கதவு செய்யப்பட்டிருக்கும். 

Tap to resize

Latest Videos

எட்டாவது மாதத்தில் சினைப் பிடிக்கும். கர்ப்பகாலம் ஆறுமாதம். ஒன்று முதல் மூன்று குட்டிகள் வரை ஈனும். அதிகபட்சம் நான்கு முறை குட்டிகள் ஈன்ற ஆட்டை, கழித்து விடுவோம். அவற்றை தனியாக வளர்க்கலாம். அல்லது இறைச்சிக்கு விற்று விடலாம். குட்டி, ஆறுமாதம் வரை தாய்ப்பால் குடிக்கும். ஆறுமாத குட்டியின் எடைக்கேற்ப, பெட்டை கிலோ ரூ.350க்கும், கிடாவை கிலோ ரூ.300க்கும் விற்கிறோம். பத்து பெட்டைகளுக்கு ஒரு கிடா போதும்.

மக்காச்சோளம், கம்பு, கோதுமை மாவு, உளுந்து, துவரை தூசி, தேங்காய் புண்ணாக்கு அனைத்தையும் ஒன்றாக கலந்து, கூழாக்கி வட்டில் வைப்போம். வேலிமசால் அகத்தி, கோ4 புல் ரகங்களை இயந்திரத்தில் பொடியாக நறுக்கி தீவனமாக தருகிறோம். காலையில் எங்களுடைய நிலத்தில், மேய்ச்சலுக்கு விடுவோம். வெயில் வரும் போது, கொட்டிலில் அடைத்து விடுவோம். 

ஆறுமாதத்திற்கு ஒருமுறை ஒரு லட்ச ரூபாய் வரை லாபமாக கிடைக்கும். என் பேரன்கள் முத்துப்பாண்டி, செல்லப்பாண்டி இருவரும் இளங்குட்டியை, தாயிடம் சரியாக சேர்த்து விடுவர். இடைவெளி விட்டு பலகை அமைத்துள்ளதால், புழுக்கைகள் தரையில் விழுகிறது. தினமும் கொட்டிலை சுத்தம் செய்ய வேண்டும். மாதம் ஒருமுறை கழுவுவோம்.

வெயில் காலத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும். முறையான நோய் தடுப்பு ஊசி போடணும். இருமினால், தும்மினால் மருந்து, பேன் மருந்து, உண்ணி மருந்து தெளிக்கணும். முறையான பராமரிப்பு இருந்தால், லாபமும் நிரந்தரமாக இருக்கும்.

click me!