1.. பஞ்சகாவ்யா:-
undefined
பசுவின் கழிவுகள் உரமாகப் பயன்பட்டன. ஆனால் பசுவிலிருந்து பெறப்படும் பசுஞ்சாணம், மூத்திரம். பால், தயிர், நெய், ஆகிய 5 பொருள்களும் கலந்த பஞ்சகாவ்யம் பல ஆண்டுகள் கழித்து இப்போது பஞ்சகாவ்யா என்றும் ஆவூட்டம் என்றும் பரவலாக பல இடங்களில் பயிர்கட்கும், கால்நடைகட்கும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
பயிருக்கு பயிர் ஊக்கியாகவும், பூச்சிநோய் விரட்டியாகவும் பயன்படும்.
செய்முறை
பச்சை பசுஞ்சாணம் – 5 கிலோ
பசு மாட்டு சிறு நீர் – 3 லிட்டர்
பசுமாட்டு பால் – 2 லிட்டர்
நன்கு புளித்த தயிர் – 2 லிட்டர்
நெய் – 1 லிட்டர்
கரும்பு சாறு – 3 லிட்டர்
இளநீர் – 3 லிட்டர்
வாழைப்பழங்கள் – 12
மேலே கண்ட அனைத்து பொருள்களையும் ஒரு பிளாஸ்டிக் வாளியிலோ அல்லது மண் தொட்டியிலோ இட்டு காலை, மாலை இருவேளையும் நன்றாக கலக்கி வரவும், 15 நாட்களில் பஞ்சகாவ்யா தயார்.
நாம் சொன்ன அளவிற்கு 20 லிட்டர் கிடைக்கும். இதனை 100 லிட்டர் நீருக்கு 3 லிட்டர் கரைசல் அல்லது 10 லிட்டர் கொள்கலன் அளவுள்ள விசைத்தெளிப்பான் அல்லது கைத்தெளிப் பானுக்கு 300 லிட்டர் என்ற அளவுக்கு கலந்து இலை வழி உரமாக காலை அல்லது மாலை நேரங்களில் எல்லா பயிர்களுக்கும் தெளிக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு சுமார் 3 லிட்டர் தேவைப்படும். இதே கரைசலை நிலவள ஊக்கியாகவும் பயன்படுத்தலாம். அதற்கு ஒரு ஏக்கருக்கு 20 லிட்டர் கரைசலை நடை தண்ணீருடன் வாய்க்காலில் கலந்து மாதம் ஒருமுறை விடலாம்.
நெல்லில் அதிகமகசூல், அதிக எடை, குறைந்த கருக்காய். அதிக அரிசி, சுவையான அரிசி கிடைத்துள்ளது.
2.. அமிர்த கரைசல் (நிலவள ஊக்கி)
இதை பஞ்சகவ்யாவின் தங்கை எனலாம். தயாரிப்பு எளிது. செலவு குறைவு. உடன் தேவைக்கு உடன் தயாரிக்கலாம்.
செய்முறை
பச்சை பசுஞ்சாணம் – 10 கிலோ
பசுவின் சிறுநீர் – 10 லிட்டர்
நாட்டு சர்க்கரை – 250 கிராம்
தண்ணீர் – 100 லிட்டர்
இவைகளை சிமெண்ட் தொட்டியில் போட்டு கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்தநாளே கரைசல் தயார். இதை 10% கரைசலாக பாசனநீருடன் கலந்தும் அதே 10% தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.
நிலவள ஊக்கியாக பாசன நீருடன் கலந்துவிட ஏக்கருக்கு 500 லிட்டர் தேவைப்படும். தெளிப்பு உரமாகப்பயன்படுத்த 10 லிட்டர் போதுமானது. இது மண்ணின் வளத்தையும் நலத்தையும் கூட்டி எல்லா பயிர்களுக்கும் நல்ல பலன் தருகிறது.
பயிர்கள் சிவந்து, பழுப்பு நிறத்தில் காணப்படுவதற்கு பூச்சிமருந்து தயாரித்தல் இலை சுருட்டுப்புழு மற்றும் ஆடு திண்ணாத இலைகள் ஐந்து அல்லது ஒடித்தால் பால் வரும் இலைகள் ஐந்தும், ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடுத்து சிறு துண்டுகளாக்கி நசுக்கி ஒரு பானையில் போட்டு, அதில் தலைகள் மூழ்கும் அளவிற்கு பசுமாட்டு சிறு நீர் ஊற்றி பானையை வேடுகட்டி குப்பை குழியில் குழிவெட்டி மூடி 15 அல்லது 20 நாள் கழித்து எடுத்து வடிகட்டி பாதுகாத்து வைக்கவும்.
ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் கலந்து தெளிக்கவும்.