வேளாண்மையில் பயிர் பாதுகாப்பில் பூச்சி, நோய் மற்றும் பயிரின் எதிரிகள் ஆகியவற்றிலிருந்து பயிரை பாதுகாப்பது மிக அவசியமான ஒன்று. பயிர் பாதுகாப்பு என்றவுடன் தவறான எண்ணம் இன்னும் பரவி நிற்கிறது.
பயிர்ப் பாதுகாப்பில் ரகங்களின் தேர்வு, பட்டம் எல்லா விவசாயிகளுகும் ஒன்றாக செயல்படுதுதல். உரநிர்வாகம், நீர் நிர்வாகம் பூச்சிகள் கண்காணிப்பு, பொருளாதார சேதநிலை இந்த அம்சங்கள் அனைத்தும் மிக, மிக முக்கியமானவை.
பயிர்பாதுகாப்பில் சுற்றுப்புற சூழ்நிலை கெடாமல், பொருட் செலவு அதிகமில்லாமல் இருப்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
பூச்சிகள் கண்காணிப்பு:
சில ஆணடுகளுகு முன் வேளாண்மையில் உரமிடுதல், களையெடுத்தல் போன்ற பணிகளைப் போலவே ஒருசில குறிப்பிட்ட தினங்கள் இந்த மருந்தை இந்த அளவில் தெளியுங்கள் என்று சொல்லி வந்தோம்.
அந்த நிலை மாறி தற்போது தேவைப்படும் போது குறிப்பிட்ட அளவு குறிப்பிட்ட மருந்ததை பயன் படுத்துங்கள் என்று கூறுகிறோம். அந்த தேவைப்படும் நேரம் வந்துவிட்டதா என்பதை அறியத்தான் பூச்சிகளின் கண்காணிப்பு அவசியம். இதற்கு விளகுப்பொறி, பூச்சிகளின் இன கவர்ச்சிப்பொறி போன்ற சாதனங்கள் கைகொடுக்கின்றன.
நாம் தினமும் வயலைச் சுற்றி பார்வையிடுவது மட்டுமல்லாமல் வாரம் ஒரு வயலில் இறங்கி நான்கு மூலைகளிலும், நடுவிலுமாக விளக்குப்பொறி ஆகியவற்றில் தென்படும் பூச்சிகள் உள்ளனவா என கவனமாகப் பார்க்க வேண்டும்.
ஒரு விவசாயி எந்தப்பயிரை வழக்கமாகப் பயிரிடுகின்றாரோ அந்தப் பயிரில் எந்தவகைப் பூச்சிகளெலாம் வரும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பூச்சிகள் எந்த வகையில் பயிரை சேதப்படுத்தும் என்பதை அறிந்திருக்க வேண்டும். அப்போது தான் அதற்குத் தகுந்த பாதுகாப்பு முறைகளை கையாள முடியும்.
உதாரணமாக இலையைத் தாக்கும் பூச்சிகள், குருந்தை தாக்கும் வகை, வேரைத்தாக்கும் பூச்சிகள் செடித்தண்டின் அடிப்பகுதியைத் தாக்கும் பூச்சியினம். மற்றும் சாற்றை உறிஞ்சும் பூச்சிகள் போன்றவற்றை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். பூச்சிகள் தாக்கும் தன்மைக்குத்க்க அதன் பொருளாதார சேதநிலை என்னவென்பதை அறிய வேண்டும்.
அதாவது அப்பூச்சியின் எண்ணிக்கை அல்லது தாக்கிய சேத அறிகுறி எந்த அளவு இருந்தால் பயிருக்கு அதிக நேரம் உண்டாகும். என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பயிரிலும் ஒவ்வொருவகை பூச்சிக்கும் வெவ்வேறு பொருளாதார சேதநிலைகள் உள்ளன.
தவிர்க்க வேண்டும்: இப்போது பூச்சிகள் பொருளாதார சேதநிலைக்கு மேல் உள்ளன என்பததை நிச்சயித்தவுடன் மருந்தடிக்கும் பணியில் ஈடுப்படப்போகின்றீர்களா? அங்குதான் சற்று கவனம் தேவை. வேளாண்மை ஆராய்ச்சியில் ஒவ்வொரு பூச்சிக்கும் எல்லாவிதமான மருந்துகளையும் பயன்படுத்த அதில் சிறந்த பாதுகாப்பு தரும் பூச்சிகொல்லிகளைத்தான் சிபாரிசு செய்யப்படுகின்றது.
ஒரு சில பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக கணக்கற்ற அளவில் பெருக செய்து விடும். எனவே சிபாரிசு செய்யப்பட்ட பூச்சிகொல்லியைத்தான் பயன்படுத்த வேண்டும். மற்றவைகளை அவசியம் தவிர்க்கவேண்டும்.
கைத்தெளிப்பான் சிறந்தது:
அடுத்ததாக தேர்வு செய்ய வேண்டியது எத்தகைய தெளிப்பான், மருந்தின் அளவு, தண்ணிர் அளவு எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும் என்பனவையாகும். விதைத் தெளிப்பானைவிட கைத்தெளிப்பான் சாலச்சிறந்தது.
குறுகிய காலத்தின் அதிக பரப்பளவு மருந்தடிக்க முடியாமல் போகும் என்று விசைத்தெளிபானை பயன்படுத்தக்கூடாது. அதிக பரப்பளவு மருந்து தெளிக்க வேண்டி வந்தால் அதிக எண்ணிக்கையில் தெளிப்பானையும் ஆட்களையும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் ஆகும் செலவு ஒன்றே.
மாலை நேரம் சிறந்தது:
மாலை நேரம் தான் மருந்து தெளிப்பதற்கு மிகவும் சிறந்த நேரமாகும். அதாவது மாலை 3 மணிக்கு மேல், காலை நேரமாக இருந்தால் 9 மணிக்குள்ளாக முடித்துக்கொள்ள வேண்டும். எனினும் மாலை நேரமே சிறந்தது. காரணம் இரவு பூராவும் மருந்தின் வேகம் வயலில் இருக்கும். அது மறுநாள் காலை சூரிய வெப்பம் ஏறும் வரையில் தொடரும்.
காலை வேளையில் 9 மணிக்கு மேலாக காற்று வீசத்தொடங்கிவிடும். மருந்து நாம் எண்ணிய இடத்தில் விழாது காற்று வேகத்தில் போய்விடும் மற்றும் அதிக வெப்பத்தால் மருந்து சீக்கிரமாக ஆவியாகி பயன்தராமல் போய்விடும். மருந்து அடிக்கும் நாளில் மாலை அல்லது இரவு மழைவரும் அறிகுறிகள் இருந்தால் அன்றைய தினம் மருந்து அடிக்கக்கூடாது. மருந்தடிக்க வயல்களிலிருந்து இரண்டொரு நாளைக்கு தண்ணீர் வடிகட்டாமல் இருப்பது நலம்.
சரியான அளவில்:
மருந்தின் அளவு தண்ணீரின் அளவு இவைகளை சரியான அளவில் பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கருக்கு கைத்தெளிப்பான் என்றால் 200 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக வேண்டும்.
மருந்தின் அளவை குறைத்தால் அதில் இரண்டு நஷ்டங்கள் உள்ளன. ஒன்று பூச்சிகள் சரியான அளவில் ச