கூடுதல் விளைச்சல் தரும் தாளடிக்கு ஏற்ற அதிக விளைதிறன் கொண்ட நெல் ரகங்கள் ஏடி.டீ. (ஆர்) 46.
undefined
வயது:
இந்த ரகம் நடுத்தர வயது 135 நாட்கள் கொண்டது.
பருவம்
பருவம் தமிழகத்தில் நடவு பயிராக தாளடி, பின் சம்பா (செப்டம்பர்) பருவத்தில்
விதை அளவு
எக்டேருக்கு 40 கிலோ விதை (20 சென்ட் நாற்றங்கால்) தேவைப்படும்.
நாற்றின் வயது 25-30 நாட்கள் இருக்கும் போது நாற்றுக்களை வயலில் நடவு இடைவெளி: 20×10 செ.மீ. இருக்கவேண்டும். சதுர மீட்டருக்கு 50 குத்துக்கள் இருக்கவேண்டும்.
உரஅளவு:
மண் பரிசோதனை பரிசோதனை பரிந்துரைப்பதை உரமிட வேண்டும் அல்லது கீழே குறிப்பிட்ட அளவில் உரமிடவேண்டும்.
தொழு உரம்:
தொழுஉரம் கம்போஸ்ட் 12.5 டன், ஹெக்டேர் இட வேண்டும். அல்லது பசுத்தாள் உரம் 6.25 டன் ஹெக்டேர் இட வேண்டும்.
தழைச்சத்து:
தழைச்சத்து அடியுரமாக நடவு செய்யும்போது 60 கிலோ / ஹெக்டேர் இடவேண்டும். முதல் மேலுரமாக நடவு செய்த 20-25 நாட்களில் 30 கிலோ / ஹெக்டேரும், இரண்டாம் மேலுரமாக நடவு செய்து 40-50 நாட்களில் 30 கிலோ/ஹெக்டேரும், மூன்றாம் மேலுரமாக நடவு செய்த 60-75 நாட்களில் 30 கிலோ/ஹெக்டேரும் இடவேண்டும்.
மணிச்சத்து:
மணிச்சத்து அடியுரமாக கடைசி உழவின்போது மணிச்சத்து 60 கிலோ/ஹெக்டேர் இடவேண்டும். சாம்பல்சத்து அடியுரமாக நடவு செய்யும் போது சாம்பல் சத்து 30 கிலோ/ஹெக்டேர் இடவேண்டும். மேலுரமாக நடவு செய்த 40-45 நாட்களில் 30 கிலோ/ஹெக்டேர் இட வேண்டும். துத்தகநாக சல்பேட் நடவு செய்யும்போது துத்தநாக சல்பேட் 25 கிலோ/ஹெக்டேர் இடவேண்டும். பசுந்தாள் உரம் இட்டால் துத்தநாக சல்பேட் 12.5 கிலோ / ஹெக்டேர் இடவேண்டும்.
ஜிப்சம்:
ஜிப்சம் 500கி / ஹெக்டேர் அடியுரமாக சுண்ணாம்புசத்து இல்லாத கனத்த மண் உள்ள இடங்களில் இடவேண்டும்.
உயிர் உரங்கள்
அசோஸ்பைரில்லம்:- அசோஸ்பைரில்லம் 600 கிராம்/ஹெக்டேர் விதை நேர்த்தி செய்ய வேண்டும். நடவு செய்யும்பொழுது 1000 கிலோ/ஹெக்டேர் என்ற அளவில் பறித்த நாற்றுக்களை நடவு செய்வதற்கு முன்பு நாற்றுக்களை அரைமணி நேரம் இந்த அசோஸ்பைரில்லம் கரைசலில் வைக்கவேண்டும்.
நடவு செய்வதற்கு முன் வயலில் தெளிக்க 2000கி/ஹெக்டேர் என்ந் அளவில் அசோஸ்பைரில்லம் தேவைப்படுகிறது. அசோலா: அசோலா ஹெக்டேருக்கு 500 கிலோ என்ற அளவில் நடவு செய்த 10 நாட்களில் இட வேண்டும்.
விதை நேர்த்தி:
1 கிலோ விதைக்கு காப்கா அல்லது திரம் அல்லது கார்பன்டைசிம் 2 கிராம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். நடவு வயலில் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பயிரை பாதுகாக்க பொருளாதார சேதநிலை அறிந்து பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இந்த ரகம் இலையுரை அழுகல், இலைப்புறை கருகல் ம்ற்றும் பாக்டீரியல் இலைக்கருகல் ஆகியவற்றால் பாதிக்கப்படும் என்பதால் முன் எச்சரிக்கையாக தகுந்த தடுப்பு முறைகளை கையாள வேண்டும்.
மகசூல்:
இந்த ரகம் ஹெக்டேருக்கு 6.2 டன்கள் அதிக விளைச்சல் தரக்கூடிய தாளடியில் ஏடி.டீ.(ஆர்), 46 என்ற நெல் ரகத்தை பயிர் செய்து மேற்கூறிய சாகுபடி குறிப்புகளை பின்பற்றினால் அதிக விளைச்சல் பெறலாம்.