நெல் பயிரைத் தாக்கும் நோய்களுள் முக்கியமானது நெல் துங்ரோ நச்சுக்யிரி நோய். இது பச்சை தத்துப் பூச்சியினால் பரப்பப்படுகிறது. குஞ்சுகள் மற்றும் முழு வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலைகளின் மையப்பகுதியிலிருந்து ஓர்ங்க்ளை நோக்கி சாறை உறிஞ்சுகின்றன.
நோயின் அறிகுறிகள்: பயிர்கள் வளர்ச்சி குன்றியும், வீரியம் குறைந்தும், குட்டையாகவும் இருக்கும். பச்சை தத்துப்பூச்சிகள் இலைகளின் சாறினை உறிஞ்சுவதால் தூர்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும்.
undefined
இலையின் நுனி மஞ்சள் நிறமாக மாறி பின் கீழ் நோக்கிப் பரவ ஆரம்பிக்கும். பயிரின் மேல் பகுதியில் உள்ள இலைகள் முதலில் பழுப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறக் லோடுகள் இலை நரம்பிற்கு இணையாக காணப்பட்டு பின் சிறிது சிறிதாக வெளிறி மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறமாகும்.
வேரின் வளர்ச்சி குன்றும் பூக்கும் தன்மை 15 முதல் 25 நாட்கள் பெந்தும். இதனால் பாதிக்கப்பட்ட பயிர்கள் காலம் தாழ்த்தி முதிர்ச்சியடையும். கதிர்கள் சிறியதாகவும், மலட்டுத்தன்மை கொண்டதாகவும், கண்ணாடி இலையிணை விட்டு வெளிவராமெலும் இருக்கும். செடிய்கின் நெல் மணிக்ள் எண்ணிக்கையும் அதன் எடையும் குறையும்.
நெல் தூங்ரோ நச்சுயிரி நோயை கட்டுப்படுத்துவதற்கான நோய் நிர்வாகம்:
விளக்கு கம்பத்திற்கு அருகில் நாற்றங்கால் அமைக்ககூடாது. பச்சை தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை கவனத்தோடு அடிக்கடி கண்காணிக்க வேண்டும். இவற்றை கட்டுப்படுத்த கார்போபியுரான் குருணை மருந்தினை எட்டு சென்ட் நாற்றங்காலிற்க்கு 1.4 கிலோ வீதம் விதைத்த 10-வது நாளில் தூவ வேண்டும்.
நாற்றங்காலில் மோனோ குரோட்டோபாஸ் அல்லது பாஸ்போமிடான் அல்லது பெந்தியான் பூச்சிக் கொல்லியை முறைய்கே 40 மி.லி. 20 மி.லி. மற்றும் 20 மி.லி. விதைத்த 10-த்து மற்றும் 20-வது நாளில் தெளிக்கவேண்டும்.
வேப்ப எண்ணெய் 3 சதம் அல்லது வேப்பங்கிட்டைச்சாறு 5 சதம் நாற்று நட்ட 15, 25 மற்றும் 35-வது நாட்களில் தெளிப்பதன் மூலம் பச்சை தத்துப்பூச்சிகளைக் குறிப்பிடத்தக்க வகையில் கட்டுப்படுத்துவதோடு நன்மை பயக்கும் பூச்சிகளான ஒட்டுண்ணி ம்ற்றும் ஊண் விழுங்கிகள் ஆகியவற்றிற்கு கேடு விளைவிப்பதில்லை.
நாற்றங்காலில் பச்சை தத்துப் பூச்சிகளின் இனப் பெருக்கத்தை தடுக்க மீதமுள்ள நாற்றுகளை எரித்தோ அல்லது வயலிலே மடக்கி உழுதோ கட்டுப்படுத்தலாம்.
நடவு வயல் பண்படுத்தும் போது நிலத்தினை நன்கு உழுது முந்திய பயிறின் தழைகளை மண்ணுடன் கலக்குமாறு மடக்கி உழவேண்டும்.
நடவு வயலில் மோனே குரோட்டபாஸ் (400 மி.லி. / ஏக்கர்) அல்லது பாஸ்போ மிடான் (200 மி.லி./ ஏக்கர்) என்ற மருந்தினை நட்ட 15-20 நாட்களுக்குள் தெளிக்க வேண்டும். துங்ரோ நச்சுயிர் நோய் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பிடுங்கி அழிக்கவேண்டும்.
விளக்குப்பொறி: விளக்குப்பொறி வைத்து பச்சைத் தத்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கவேண்டும். மேலும் அவைகளின் பெருக்கத்தை கண்காணித்திட வேண்டும்.
மிகவும் அதிகமாக பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்குமாயின் பயிரினை முற்றிலும் எரித்து அழிக்க வேண்டும். சுற்றியுள்ள பாதிக்கப்பட்டாத நெற் பயிர்களை பாஸ்போமிடான் (200 மி.லி./ஏக்கர்) அல்லது மோனோ குரோட்டோபாஸ் (400 மி.லி./ஏக்கர்) தெளித்து பச்சைத் தத்துப்பூச்சிகள் பரவாதபடி கட்டுப்படுத்த வேண்டும்.
நோய் பரப்பும் பூச்சிகள் வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களை மற்றும் புல்களில் தங்க வாய்ப்புகள் உள்ளமையால், வயலினை களை எடுக்த்து வைப்பதோடு பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது வரப்புகளில் உள்ள புல் வகைகளிலும் தெளிக்க வேண்டும்.