சம்பாவுக்கு ஏற்ற உயர் விளைச்சல் ரகம் நெல் ஏடிடீ 44:
வயது:-
148 நாட்கள் (145-150 நாட்கள்)
பருவம்:-
சம்பா (ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 10 தேதி வரை விதைப்பு செய்யவேண்டும்).
விதை அளவு:-
எக்டேருக்கு 30 கிலோ (20 சென்ட் நாற்றங்கால்).
நாற்றின் வயது:-
25 நாட்கள்
33 குத்துக்கள்
நடவு இடைவெளி:- 20×15 செ.மீ. (சதுர மீட்டருக்கு 33 குத்துக்கள்)
உர அளவு (எக்டேருக்கு):-
மண் பரிந்துரைப்படி உரமிடவும் அல்லது கீழ் குறிப்பிட்ட அளவில் இடவும்.
அ. தொழு உரம் –
பசுந்தழை:- 12.5 டன்/எக் அல்லது 6.25
ஆ. அசோஸ்பைரில்லம்:
5 கிலோ / எக் – விதையை ஊற வைக்கும்போது 1 கிலோ நாற்றங்காலில் 2 கிலோ நடவின் போது 2 கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
இ. பாஸ்போ பாக்டோரியா:
2 கிலோ/எக் நடவின் போது இடவும்.
ஈ. தழைச்சத்து:
அடியுரம் (கடைசி உழவில்) 30 கிலோ/எக்
மேலுரம்:- முதல் உரம் (நட்ட 25-ம் நாள்) 30 கிலோ/எக், 2-ம் உரம் (நட்ட 50-ம் நாள்) 30 கிலோ/எக், 3-ம் உரம் (நட்ட 75-ம் நாள்), 4-ம் உரம் (நட்ட100-ம் நாள்)
உ. மணிச்சத்து:- அடியுரம் (கடைசி உழவில்க்) 60 கிலோ/எக்
ஊ. சாம்பல் சத்து:- அடியுரம் – (கடைசி உழவில்) 30கிலோ/எக், 3-ம் மேலுரம் (நட்ட 75-ம் நாளில்) 30 கிலோ/எக்
எ. துத்தநாகசல்பேட் – 25 கிலோ/எக் நடவின் போது இடவும்.
ஏ. நீலப்பச்சை பாசி – 10 கிலோ/எக் நட்ட 10-ம் நாள் இடவும்.
இந்த ரகம் பாக்டீரியல் இலைகருகல் மற்றும் இலையுறை அழுகல் நோயால் பாதிக்கப்படக் கூடியது. எனவே முன்கூட்டியே மருந்து அடிக்கவேண்டும்.
இந்த ரகம் பச்சை தத்துப்பூச்சி மற்றும் குலை நோய்க்கு எதிஉப்பு திறனும், வயல் வெளியில் குருத்துப் பூச்சி மற்றும் குலை நோய்க்கு எதிர்ப்பு திறனும், வயல் வெளியில் குருத்துப்பூச்சி மற்றும் இலைப்புள்ளி நோய்க்கு எதிர்ப்புத்திறனும், வயல் நிலையில் இலைசுருட்டுப்புழுவிற்கு நடுத்தர எதிர்ப்பு திறனும் கொண்டது.
அறுவடை:-
பயிர் பூத்த 25-30 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும்.