குறுவையில் அதிக விளைச்சலைத் தரும் நெல் ரகங்கள் இதோ…

 |  First Published Jul 7, 2017, 1:02 PM IST
Here are the high yielding rice varieties in the yard ...



குறுவைப் பட்டம் நெல் சாகுபடிக்கு இது ஏற்ற பருவமாகும்.  முதல் போகமான குறுவைப் பட்டத்தில் சாகுபடி செய்ய வீரிய ஒட்டு நெல் ரகம் உகந்ததாகும். 

இந்த குறுவைக்கு ஏற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்கள் மற்றும் ஒட்டுவீரிய  நெல்  ரகம் பற்றிய குறிப்புகள் இதோ.

Tap to resize

Latest Videos

ஆடுதுறை – 36

1980-ஆம் வருடம் ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்திலிருந்து இந்த ரகம் வெளியிடப்பட்டது.  80-85 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது.  105-110 நாட்கள் வயதுடையது.  குட்டையான  சாயத ரகம் இது.  ஹெக்டேருக்கு 5.5 முதல் 6 டன் வரை விளைச்சல் தரக்கூயது.

ஆடுதுறை – 37

1987-ம் வருடம் வெளியிட்ப்பட்ட இந்த ரகம் குட்டையான சாயாத செடிகளைக் கொண்டது.  105-110 நாட்கள் வயதுடையது. ஹெக்டேருக்கு6-6.5 டன் வரை விளைச்சல் தரவல்லது.  சன்ன உருண்டையான நெல்மணி, வெள்ளை அரிசியைக் கொண்டது.  பழப் பூச்சிகளுக்கும், நோய்களுக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டது.  குறிப்பாக மஞ்சள் இலைநோய் இந்த ரகத்தில் தோன்றுவதில்லை.

ஆடுதுறை – 42

1994-ம் ஆண்டு வெளியிடப்பட்ட  இந்த ரகம் 115 நாடகள் வயதுடையது.  குட்டையானது.  சாயாதது.  ஹெக்டேருக்கு 6-6.5 டன் வரை விளைச்சல் தரவல்லது.  நெல் நீண்ட சன்னம் வெள்ளை அரிசி கொண்டது.

ஆடுதுறை – 43

இது 1998-ம் ஆண்டு வெளியிடப்பட்ட குட்டையான ரகமாகும்.  வளர்ந்து சாயாதது.  110-115 நாட்கள் வயதுடையது. தமிழ்நாடு முழுவதும் (கன்னியாகுமரி, தூத்துக்குடி தவிர) பயிர் செய்யலாம் ஹெக்டேருக்கு 5.9 டன் விளைச்சல் தரவல்லது.  மிகச் சன்னமானது.  வெள்ளை அரிசி கொண்டது.  வெள்ளைப் பொன்னியைக் காட்டிலும் சன்னமானது. பச்சை தத்துப் பூச்சிக்கு எதிர்ப்பு திறன் கொண்டது.

ஏ.எஸ்.டி. 16 (அம்பை-16)

அம்பாசமுத்திரம் நெல் ஆய்வுப் பண்ணையிலிருந்து 1986-ம் ஆண்டு இந்த ரகம் வெளியிடப்பட்டது.  115 நாட்கள் வயதுடையது.  5.5 டன் விளைச்சல் கொடுக்க வல்லது.  ஆடுதுறை 31-ஐப் போன்று சற்று பருமனாக மோட்டா நெல்லைக் கொண்டது.  குலை நோய்க்கும், [உரையழுகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.

ஏ.எஸ்.டி. 17 (அம்பை-17)

1989-ம்  ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ரகம் குட்டையானது.  வளர்ந்து சாயாதது. இதனுடைய வயது 95 முதல் 100 நாட்கள் ஆகும்.  ஹெக்டேருக்கு 5.4 டன் வரை விளைச்சல் தரவல்லது.  இதனுடைய நெல் உருண்டையாக, பருமனாக இருக்கும். அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும்.  நாற்று விட்டு நடும்பொழுது 18 முதல் 20  நாட்களுக்குள் நடவேண்டும், இது குலைநோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.

ஏ.எஸ்.டி. 18 (அம்பை-18)

இது 1991-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.  105-110 நாட்கள் வயதுடைய குட்டையான ரகம் ஆகும்.  வளர்ந்து சாயாதது. குலைநோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. ஹெக்டேருக்கு 7.3 டன் வரை விளைச்சல் தரவல்லது,  அரிசி வெள்ளையாகவும், நெல் மத்திய சன்னரகமாகவும் இருக்கும்.

ஏ.எஸ்.டி. 20 (அம்பை-20)

இது 1997-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ரகம், 105 முதல் 115 நாட்கள் வயது உடையது.  வளர்ந்து சாயாத  குட்டையான ரகமாகும்.  ஹெக்டேருக்கு6-6.5 டன் வரை விளைச்சல் தரவல்லது. நெல் நீண்ட சன்னரகமாகவும், அரிசி வெள்ளையாகவும் இருக்கும்.  பல நோய்களுக்கும், பூச்சிகளுக்கும் எதிர்ப்பு சக்தி கொண்டது.

மதுரை – 5

இது 1996-ம் வருடம் மதுரை வேளாண் கல்லூரியிலிருந்து வெளியிடப்பட்டது.  இது குட்டையான ரகமாகும்.  95-100 நாட்கள்  நேரடி விதைப்பிற்கு மிகவும் ஏற்ற  ரகம்.  குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புழுதிக்கால் சாகுபடியில் இதனை நேரடி விதைப்பாகவும், நாற்று விட்டும்  பயிர் செய்யலாம்.  ஹெக்டேருக்கு 5 டன் வரை விளைச்சல் தரக்கூடியது.  மத்திய சன்னரக நெல்லுடன் வெள்ளை அருசி கொண்டது.  பல நோய்களையும் பூச்சிகளையும் தாங்கி வளரக்கூடிய சக்தியைக் கொண்டது.

டி.கே.எம். 9

இந்த ரகம் 1978-ம் ஆண்டு கரூர் நெல் ஆராய்ச்சி பண்ணையிலிருந்து வெளியிடப்பட்டது.  குட்டையான சாயாத ரகம்.  110-115 நாட்கள் வயதுடையது.  புழுதிக்கால் நெல் சாகுபடியில் நேரடி விதைப்பிற்கு ஏற்ற ரகம்.  எக்டேருக்கு 6-6.5 டன் வரை விளைச்சல் கொடுக்கும்.  இது குலைநோய் மற்றும் புகையான் பூச்சியை தாங்கக்கூடிய சக்தி இல்லாதது. நெல் குட்டையாக பருமனாக இருக்கும் சிவப்பு அரிசி கொண்டது.

click me!