தாளடி (அ) பிசானத்திற்கு ஏற்ற உயர் விளைச்சலைக் கொடுக்கும் நெல் ரகங்கள்…

 |  First Published Jul 7, 2017, 12:59 PM IST
High yielding paddy varieties of paddy or rice ...



கார் மற்றும் குறுவை என்று சொல்லக் கூடிய பருவங்களில் நெல் முதல் போகமாகப் பயிரிட்டு  அறுவடை செய்த பிறகு அதே வயலில் 2-வது போகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 

இப்பருவத்தை தாளடி என்றும், பிசானம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பருவம் செப்டம்பர் – அக்டோபரில் தொடங்கி ஜனவரி – பிப்ரவரியில் முடியும்.

Tap to resize

Latest Videos

இதற்கு ஏற்ற ரகங்கள்

ஐ.ஆர்-20

125-130 நாட்கள் வயதுடையது.  வளர்ந்து சாயதது. எக்டேருக்கு 5.5 டன்கள் விளைச்சல் தரவல்லது.நெல் மத்திய சன்னம் வெளை அரிசி கொண்டது.  பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சமையலுக்கு மிகவும் ஏற்றது தண்டுத்துளைப்பானுக்கு எதிர்ப்பு கொண்டது.

அம்பை-19

125 நாட்கள் வயதுடைய இந்த ரகம் வளர்ந்து சாயதது. எக்டேருக்கு 5.8 டன்கள் விளைச்சல் தரவல்லது.  ஓரளவுக்கு வறட்சியை தாங்கி வளரக்கூடியது.  நெல் சன்னமாய் வெள்ளை அரிசி கொண்டிருக்கும்.  குலை நோயைத்தாங்கி வளரக்கூடியது.

மதுரை-2

130-135 நாட்கள் வயதுடையது.  வளர்ந்து சாயதது.  எக்டேருக்கு 5 டன்கள் விளைச்சல் தர வல்லது.  நெல் மத்திய சன்னத்துடன் வெள்ளை அரிசி கொண்டு இருக்கும்.  குளிரைத்தாங்கி வளரும் இந்த நெல் ரகம் மதுரை கம்பம் பள்ளத்தாக்கிற்கு ஏற்றது.

மதுரை-4

125 நாட்கள் வயதுடையது வளர்ந்து சாயதது.  எக்டேருக்கு 6 டன்கள் விளைச்சல் தர வல்லது. நெல் நீண்ட சன்னம் வெள்ளை அரிசி கொண்டது.  குளிரைத்தாங்கி வளரக்கூடியது மதுரை கம்பம் பள்ளத்தாக்கிற்கு ஏற்றது.

திருச்சி-1

130-140 நாட்கள் வயதுடையது. வளர்ந்து சாயாதது. களர் மற்றும் உவர்  நிலங்களில் பயிரிட ஏற்றரகம்.  நெல் குட்டை மற்றும் பருமன் அரிசி வெள்ளை நிறம் கொண்டது.

டிபிஎஸ்-2

125 நாட்களில் முதிர்ச்சி அடையும்.  வளர்ந்து சாயதது.  எக்டேருக்கு 5 டன்கள் தர வல்லது. நெல் மத்திய சன்னம் வெள்ளை அரிசி கொண்டது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்பப்பூ பருவத்திற்கு ஏற்ற ரகம்.

டிபிஎஸ்-3

135 நாட்கள் வயதுடையது. வளர்ந்து சாயாதது.  எக்டேருக்கு 5.3 டன்கள் விளைச்சல் தர  வல்லது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கும்ப்பூ பருவத்திற்கும் ஏலா சாகுபடிக்கும் உகந்த ரகம் இது.

மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி

135-140 நாட்கள் வயதுடையது.  வளர்ந்து சாயக்கூடியது. எக்டேருக்கு சுமார் 4.5-5 டன் வரை விளைச்சல் தரவல்லது. அரிசி மத்திய சன்னத்தில் வெள்ளையாக இருக்கும்.  பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசி இவை 2-ம் எல்லா வகை ச்மையலுக்கும் ஏற்றது.  பச்சை தத்துப்பூச்சி மற்றும் துங்ரோ நச்சுயிர் நோய்க்கு எதிர்ப்பு சக்தி கொண்டது.  மண் ஆய்வு செய்து இதன் வளர்ச்சிக்கு தகுந்தவாறு தழைச்சத்து இடுவது மிகவும் அவசியம்.

கோ-43

இது 130-135 நாட்கள் வயதுடையது.  வளர்ந்து சாயாதது.  எக்டேருக்கு 5.3 டன்கள் விளைச்சல் தர வல்லது.  நெல் மத்திய சன்னம், அரிசி வெள்ளை நிறம் கொண்டது.  களர் உவர் நிலங்களுக்கு ஏற்ற ரகமாகும்.

கோ-45

இது 130-135 நாட்கள் வயதுடையது.  வளர்ந்து சாயாதது.  எக்டேருக்கு 5.5 டன்கள் விளைச்சல் தர வல்லது.  நெல் நீண்ட வெள்ளை அரிசி கொண்டது.  புகையான் பூச்சி தாக்குதல்  அதிகமாய்  இருக்கும்.

ஏடிடீ-38

இது 130-135 நாட்கள் வயதுடையது.  வளர்ந்து சாயாதது.  எக்டேருக்கு 6 டன்கள்  விளைச்சல்  தர வல்லது.  நெல் நீண்ட சன்னமாக வெள்ளை அரிசி கொண்டிருக்கும். 

புகையான் பச்சை தத்துப்பூச்சி, இலை சுருட்டுப்புழு ஆகிய பூச்சிகளூக்கு  எதிர்ப்பு சக்தியும் கொண்டது.  பாக்டீரியல் இலைக்கருகல் நோயால் தாக்கப்படும் தன்மையுடையது.

click me!