நெல் நாற்றுகளை நட இந்த முறைகளை கவனமாகப் பயன்படுத்தவும்…

 |  First Published Jul 8, 2017, 12:28 PM IST
With these steps you can protect paddy



 

நேரடி நெல் விதைக்கும் கருவி மூலம் சக்தியில் நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி செய்வதில் கீழ்கண்ட நீர் நிர்வாக முறைகளை பின்பற்ற வேண்டும்.

Tap to resize

Latest Videos

நேரடி நெல் விதைப்பில் சரியான நிர்வாக முறைகளை கையாள்வதால் நடவுப் பயிருக்கு சம்மான  அல்லது அதற்கு மேற்பட்ட விளைச்சல் அடைய அதிக வாய்க்ப்புகள் உள்ளன. 

நேரடி விதைப்பு கருவிமூலம் நேரடி விதைப்பினை மழையில்லாத விதைப்புக் காலங்காளான குறுவை மற்றும் சம்பா பட்டங்களில் கடைபிடிக்கலாம்.

நீர் பாய்ச்சுதல்: சகதியில் நேரடி விதைப்பு செய்த நெல் வயலில் விதைத்த 18 அல்லது 20 மணி நேரத்தில் நீரை வடிக்கவேண்டும். 3 முதல் 5 நாட்கள் வரை வயல் ஈரமாக இருக்கும்படி  நீர் வைக்கவேண்டும். 

பின்பு நாற்றுகள் வளர்ச்சிக்கு தக்கவாறு நீரின் அளவை அதிகரிக்கலாம்.  பயிரின் ஆரம்ப வளர்ச்சி பருவத்திலிருந்து முற்றும் பருவம் வரை வயலின் 2.5/5.0 செ.மீ. நீர் நிறுத்த   வேண்டும். 

பயிரின் முக்கிய   வளர்ச்சி பருவங்களான தூர் கட்டும் பருவம்  பஞ்சு கட்டும் பருவம்,  தொண்டை கதிர் பருவம்,  கதிர் வெளிவரும் காலம் மற்றும் பூக்கும் தருணம். ஆகிய பயிர் நிலைகளில் போதிய அளவு நீர் பாய்ச்சுதல் அவசியம். 

இத்தருணங்கள் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பின் விளைச்சல் பாதிக்கும். பூக்கும், தருனத்திலிருந்து 21-25 நாட்களுக்கு பிறகு சிறிது சிறிதாக நீரை  வயலின் இருந்து வடிக்கவேண்டும்.

களை நிர்வாகம்:

நெல் நாற்றங்காலில் விதைகள் மூலமும் நாற்றுகள்  முலம் பரவக்கூடிய நெத்தவரை போன்ற புல்லிண்க்களைகளையும் மற்றும் கோரை ஆகியவற்றையும் கட்டுப்படுத்த களைக்கொல்லயினைப் பயன்படுத்தலாம். 

எட்டு சென்டு  நாற்றங்காலுக்கு விதைத்த 8-வது நாளில் 80 மில்லி பூட்டோ குளோர், தயோபென்கார்ப் அல்லது 40 மில்லி அனிலோபாஸ் களைக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை மண்ணுடன் கலந்து சீராக தூவ வேண்டும். 

களைக்கொல்லி இடும்போது நாற்றங்காலில் சிலுப்பு நீர் இருப்பது நல்லது.  களைக்கொல்லி இட்ட பின்பு நீரை வ்டிகட்டக்கூடாது. மேற்குறிப்பிட்ட களைக்கொல்லிக்ளை விதைத்த 8 நாட்களுக்கு முன்பு பயன்படுத்தினால் நெல் விதையின் முக்ளைப்பு திறன் பாதிக்க்ப்படும்.

நெல் நாற்று நடும் முறை: குறுகிய கால ரகங்களை 25 நாட்களிலும்,  மத்திய கால ரகங்களை 25-30 நாட்களிலும், நீண்ட கால ரகங்களை30-35 நாட்களிலும் நடவு செய்ய வேண்டும். 

நடவு செய்வதற்கு முன்பாக புடுங்கிய நாற்றுகளை அசோஸ்பைரில்லம் கரைசலில் நாற்றுகளின் வேர்கள் நன்கு நனையும்படி 15 நிமிடங்க்ள் நன்கு ஊற வைத்துப் பிறகு நடவேண்டும்.

நாற்றுகள் நடும்போது குறுகிய கால ரகங்கள் சதுர மீட்டருக்கு இடத்திற்கு தகுந்தவாறு  66-80 குத்துக்கள் என்றும் மத்திய் கால ரகங்களை சதுர மீட்டருக்கு 50 குத்துக்கள் என்றும் நீண்ட கால ரகத்திற்கு சதுர மீட்டருக்கு 33 குத்துக்கள் என்ற எண்ணிக்கையில் கதிர்கள் பெறமுடியும்.  இந்த கதிர்கள் எண்ணிக்கைதான் எக்டருக்கு 5 டன்கள் விளைச்சலுக்கு மிகவும் முக்கியம்.

இடைவெளி:

குறுகிய கால ரகங்களை  (105-115 நாட்கள்) ஒரு குத்துக்கு நாற்றுகளின் எண்ணிக்கை 2 அல்லது 3 இருக்குமாறும் நாற்றுக்ளின் இடைவெள் 12.5X10 செ.மீ.  இருக்குமாறு நடவேண்டும். 

மத்திய கால ரகங்கள் (125-135 நாட்கள்) ஒரு குத்துக்கு 2 நாற்றுகள் இருக்குமாறு நாற்றுகளின் இடைவெளி 20X10 செ.மீ. இருக்குமாறும் நட வேண்டும்.  நீண்ட காலரகங்களை (140-160 நாட்கள்) ஒரு குத்துக்கு ஒரு நாற்று வைத்து நாற்றுகளின்  இடைவெளி 20X15செ.மீ. இருக்குமாறு நடவேண்டும். 

ஒட்டு வீரிய நெல் ரகங்க்ளை ஒரு குத்துக்கு ஒரு நாற்று வைத்து நாற்றுகளின் இடைவெளி 20X10 செ.மீ.  இருக்குமாற்று நடவேண்டும்.  நடவு செய்யும் பொழுது நிலத்தில் 2.5 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் நிறுத்தியிருக்க வேண்டும்.  நாற்றுகளை நிலத்தில் 2.5 முதல் 3 செ.மீ. ஆழத்தில் நடவேண்டும்.

click me!