காய்கறிப் பயிர்களை அதிகமாகத் தாக்கும் கள்ளிப்பூச்சிகளை கட்டுப்படுத்த இதை பயன்படுத்துங்க…

First Published Jul 14, 2017, 1:21 PM IST
Highlights
Use this to control cacti bulbs that attack the vegetable crops ...


வெண்டை, கத்தரி, தக்காளி போன்ற காய்கறி பயிர்களை அதிகமாக தாக்கும் கள்ளிப்பூச்சி எனப்படும் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் வழிகள்:

மாவுப்பூச்சிகளை பரப்புவதிலும், அவற்றை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதிலும், எறும்புகள் முக்கிய பங்காற்றுகின்றன.

எறும்புகளின் துணையின்றி மாவுப்பூச்சிகளில் பரவல் மிகவும் கடினம். எனவே மாவுப்பூச்சி கட்டுப்பாடு நிர்வாகத்தில் எறும்புகள் கட்டுப்படுத்துவதும் மிகவும் முக்கியம்.

மாவுப்பூச்சிகளில் பல வகை உள்ளன. ஓவ்வொரு வகைக்கும் பூச்சி நிர்வாகம் வேறுபடுவதால் எந்த வகையான மாவுப்பூச்சியின்; தாக்குதல் உள்ளது என அறிவது முக்கியம். மாவுப்பூச்சிகளின் மேல் மெழுகு படிவங்கள் காணப்படுவதால் பூச்சி மருந்துகளை மட்டும் பயன்படுத்தி கட்டுப்படுத்துவது கடினம்.

உழவியல் முறை

எறும்புகளின் நடமாட்டத்திற்கு தடைகளை ஏற்படுத்துவது (உ-ம்) வயலைச்சுற்றி, மரத்தைச்சுற்றி சிறு அகழி அமைப்பது மற்றும் கிரீஸ் தடவிய தகடுகளை வைப்பது.

அறுவடைக்குப்பின் பயிர்க் கழிவுகளை உடனடியாக வயலிலிருந்து அகற்றுவதால் மாவுப்பூச்சி அடுத்த பயிருக்கு செல்வது தடுக்கப்படுகிறது.

வயலைச் சுற்றிலும் வயலினுள்ளும் களைச்செடிகள் இல்லாமல் வைப்பதால் மாவுப்பூச்சிகளின்; பெருக்கமும்இ எறும்புகளின் நடமாட்டமும் குறைகிறது.

மாவுப்பூச்சிக்கு மாற்று உணவுப் பயிராக உள்ள செம்பருத்தி, புளிச்சை கீரை, வெண்டை, சீத்தா மற்றும் கொய்யா போன்றவற்றை அருகருகே பயிரிடக் கூடாது.

விவசாயக்கருவிகளை நன்கு சுத்தம் செய்தபின் மாவுப்பூச்சி பாதிப்பு இல்லாத வயல்களில் பயன்படுத்த வேண்டும்.

பாதிப்பு சிறு பகுதியில் இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கிள்ளி அழிக்க வேண்டும். மேலும் தண்ணீரை வேகமாக பாய்ச்சுவதாலும் மாவுப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

களைப்பயிர்களான சாரணை, பார்த்தீனியம், குப்பைமேனி மற்றும் தண்டுக்கீரை வகைச் செடிகள் போன்றவற்றை அழிக்க வேண்டும்.

உழவின் போது எறும்பு புற்றுகளை அழிக்க வேண்டும்.

உயிரியல் கட்டுப்பாடு

மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த உயிரியல் கட்டுப்பாட்டு முறை மிகவும் பயனள்ள நீண்ட கால தீர்வாகும். ஏனெனில் இயற்கை எதிரிகள் மாவுப்பூச்சிகள் குறைவாக உள்ள காலத்திலும் தொடர்ந்து பயன் தரக்கூடியது.

ஆஸ்திரேலிய பொறி வண்டு-கிரிப்டோலிமஸ் மான்ட்ரோசோரி 300 வண்டுகள்ஃஹெக்டேர்

பெவெரியா மற்றும் வெர்டிசிலியம் பூஞ்சானம் ஒரு லிட்டருக்கு 5கி (அ) 5மி.லி. என்ற அளவில் கலந்து செடிகளில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்துகள்

ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மாவுப்பூச்சிகளை ஓரளவு கட்டுப்படுத்தும். இளம் பூச்சிகளை பூச்சிக்கொல்லி மருந்துகள் எளிதாக கட்டுப்படுத்தும்.

எறும்பு புற்றுகளை அழிக்க குளோர்பைரிபாஸ் 20இசி மருந்தை லிட்டருக்கு 2.5மி.லி என்ற அளவில் கலந்து  நனைக்க வேண்டும் அல்லது மாலத்தியான் தூள் மருந்தை ஹெக்டேருக்கு 25கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

இளம் பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்ப எண்ணை 2 சதம் அல்லது மீன் எண்ணை சோப்பு 2.5சதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.

பாதிப்பு அதிகமாக இருக்கும்பொழுது பின்வரும் பூச்சி மருந்துகளில் ஏதாவது ஒன்றை பயிர்களில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

புரபனோபாஸ் 50 இசி 2 மி.லி/லிட்டர், குளோர்பைரிபாஸ் 20 இசி 5 மி.லி/லிட்டர்,  அசிபேட் 70 எஸ்.பி 2 கி/லிட்டர், மீன் எண்ணை 25 கி/லிட்டர், டைமெத்தொயட் 30 இ.சி 2 மிலி./லிட்டர்.

 

click me!