தென்னந்தோப்பில் களைகளை கட்டுப்பாட்டில் வைக்க சில டிப்ஸ்…

 |  First Published Jul 14, 2017, 1:15 PM IST
Some tips to control weeds in coconut



தென்னந்தோப்புகளில் வருடம் இரண்டு முறை அதாவது ஆடி மாதத்தில் ஒருமுறையும் மற்றும் மார்கழி மாதத்தில் ஒருமுறையும் உழவு செய்வதன் மூலம் களைகளை நன்கு கட்டுபப்பாட்டில் வைக்கலாம்.

மேலும் இது வேர்களில் காற்றோட்டத்தை அதிகப்படுத்தி புதிய வேர்கள் தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள ஏதுவாகிறது.

Latest Videos

undefined

இரசாயன களைக் கட்டுப்பாடு

இருவிதை இலைகள் நிறைந்த தோப்புகளில் களை முளைப்பதற்கு முன் அட்ரசின் களைக் கொல்லியை செயல்படும் இரசாயனமாக ஒரு கிலோ அளவில் ஒரு ஹெக்டேருக்கு தெளித்து கட்டுப்படுத்தலாம்.

புல் வகை மற்றும் கோரை வகை களைச் செடிகள் உள்ள தோப்புகளில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி கிளைபோசேட் என்னும் களைக் கொல்லி மற்றும் 20 கிராம் அம்மோனியா சல்பேட் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

click me!