நிலக்கடலைக்கு  இப்படிதான் உரமிடணும்…

 |  First Published Jul 14, 2017, 1:10 PM IST
This is the fertilizer for groundnut ...



நிலக்கடலையை இறவையாக பயிர் செய்யும்போது அடியுரமாக 15 கிலோ யூரியா, 90 கிலோ சூப்பர்பாஸ்பேட், 32 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இட வேண்டும்.

மானாவாரியாக பயிர் செய்யும் போது 9 கிலோ யூரியா, 25 கிலோ சூப்பர்பாஸ்பேட் மேலும்  30 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இட வேண்டும்.

Tap to resize

Latest Videos

நிலக்கடலைக்கான நுண்ணூட்டச்சத்து 5 கிலோவுடன் உலர்ந்த மணலை பயன்படுத்தி 20 கிலோவாக்கி விதை விதைத்தவுடன் மண் பரப்பில் தூவ வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு  160 கிலோ ஜிப்ஸம் என்ற அளவில் 40 – 45 வது நாளில் இறவை பயிருக்கும் 40 – 75-வது நாளில் மானாவாரி பயிருக்கும் செடிகளின் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையை பொருத்து மண்ணை கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.

click me!