பீர்க்கன், பாகை, புடலை, கத்தரி போன்றவற்றின் காய்களை தாக்கும் ஈக்களை கட்டுப்படுத்த வழிகள்:
கொடி வகைகளை தாக்கும் இலை கடிக்கும் வண்டுகள், காய்களைத் தாக்கும் புழுக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி ஒரு மில்லி அல்லது டைமெத்தோயேட் 30 இசி 1மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25இசி 1மில்லி அல்லது பென்தியான் 100 இசி 1மில்லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்க வேண்டும்.
லிண்டேன்; தூவும் மருந்து, காப்பர் மற்றும் கந்தகத் தூள்களைக் கண்டிப்பாக உபயோகப்படுத்தக் கூடாது.
கத்தரியில் ஈக்கள் தாக்குதலை தடுக்க:
கோடை காலப்பயிரில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பசை அட்டைப்பொறி எக்டருக்கு 12 வீதம் வைக்கவேண்டும்.
வேப்பெண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் நீர் கலந்து, அதனுடன் டீப்பால் என்ற ஒட்டும் திவரம் 1 மில்லியுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்ட கலவையுடன் சேர்த்து தெளிக்கவேண்டும்.