பூச்சிகளின் முட்டைகளை நீக்ககூட கருவி இருக்கு. தெரிஞ்சுக்குங்க...

 
Published : Jun 30, 2018, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
பூச்சிகளின் முட்டைகளை நீக்ககூட கருவி இருக்கு. தெரிஞ்சுக்குங்க...

சுருக்கம்

There is also a tool to remove the eggs of pests. UNLOCK ...

பூச்சிகளின் முட்டைகளை நீக்கும் கருவி :

பயறுவகை தானியங்கள் இதர தானியங்களை விட அதிகம் அவற்றைத் தாக்கும் கேலோசோபிரக்கஸ் எனும் பூச்சிகளால் சேதாரத்திற்குள்ளாகின்றன. இப்பூச்சியானது வயல்வெளிகளிலிருந்து சேமிக்கப்படும் இடம் வரை பயறு வகை தானியங்களில் அதிக சேதாரத்தினை ஏற்படுத்துகின்றன. 

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் இப்பூச்சியின் முட்டைகளை கண்டுபிடித்து நசுக்குவதன் மூலம் இப்பூச்சிகளின் தாக்கத்தினை சேமித்துவைக்கப்பட்டுள்ள பயறுவகை தானியங்களில் குறைக்கலாம்.

இக்கருவியில், ஒரு வெளிப்புற பெட்டி மற்றும் உட்புறத்தில் துளையிடப்பட்ட ஒரு பெட்டி, அதில் சுற்றிலும் பிரஷ் போன்ற அமைப்புடன் கூடிய நீண்ட கம்பியும் இருக்கும். துளையிடப்பட்டுள்ள பெட்டியில், தானியங்களை வைக்கவேண்டும். 

பின்னர் பிரஷ் அமைப்புடன் கூடிய கம்பியினை கடிகார திசையில் 10 முறையும் கடிகாரத்திற்கு எதிர் திசையில் 3 முறையும் (காலை, நண்பகல், பிற்பகல்) சுற்றவேண்டும். பிரஷ் அமைப்பின் செயல்பாட்டால், இப்பூச்சிகளின் முட்டைகள் நசுக்கப்பட்டு தானியங்களின் சேதாரம் தடுக்கப்படுகிறது. 

இம்முறையினை உபயோகப்படுத்துவதன் மூலம், தானியங்களின் முளைக்கும் திறன் பாதிக்கப்படுவதில்லை.

இக்கருவியின் நன்மைகள்

** இக்கருவி உபயோகிப்பதன் மூலம் தானியத்தின் முளைவிடும் தன்மை பாதிக்கப்படுவது இல்லை

** ஒருமுறை பூச்சிகளின் முட்டைகள் நீக்கப்பட்டுவிட்டால் பின்பு தானியங்களை சேமிக்கும் போது மீண்டும் பூச்சிகள் உருவாவது தடுக்கப்படுகிறது.

** பூச்சிகளின் முட்டைகளை அழிப்பதன் மூலம் தானியங்களை சேமித்துவைக்கும் போது அதிகரிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது

** இப்பூச்சியின் தாக்குதலுக்கு பயந்து, பொதுவாக விவசாயிகள் பயறுவகை தானியங்களை சேமித்து வைப்பதில்லை. இக்கண்டுபிடிப்பின் மூலம் விவசாயிகளின் பயத்தினை நீக்கி அவர்கள் தங்களது தானியங்களையே விதைகளாக பயன்படுத்திக்கொள்ள ஏதுவாகிறது

** இந்த கண்டுபிடிப்பு காப்புரிமை பெறப்பட்டு, வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!